கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம் – Tamil VBC

கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்ற போது அறிமுக வீரராக களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாகவும் சிறந்த பவுலராகவும் உருவெடுத்துள்ள நடராஜனை ‘யார்க்கர் கிங்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவருக்கு புன்னகை மன்னன் என்று அவரது மனைவி புது பட்டம் ஒன்றை அளித்துள்ளார்.

பள்ளி தோழியான பவித்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடராஜன், மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்.

இது குறித்து நடராஜனின் மனைவி பவித்ரா இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது என்றும் பவித்ரா தெரிவித்துள்ளார்.

தன் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள் என நடராஜனின் மனைவி பவித்ரா வாழ்த்துக்கள் கூறியதுடன் அவர் புன்னகை மன்னன் எனவும் செல்லமாய் கூறியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *