உங்கள் தொண்டையில் கிருமிகள் இருக்கா? இதோ அதை அடியோடு விரட்டி அடிக்கும் ஆயுள் மூலிகை! – Tamil VBC

உங்கள் தொண்டையில் கிருமிகள் இருக்கா? இதோ அதை அடியோடு விரட்டி அடிக்கும் ஆயுள் மூலிகை!

ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும்.

இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது, இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும்.

இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது.

சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆடாதோடையின் சிறப்பு நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது.

இதனை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

ஆடா தோடை இலையைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்.

அதாவது இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து குடித்தால் ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால், இருமல், இளைப்பு, சுரம் தீரும்.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *