ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம் – Tamil VBC

ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

பழம்பெரும் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன்(73) உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி, கன்னட படங்கள் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஜி.ஆர் என்று அழைக்கப்படும் ஜி.ராமசந்திரன்.

மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை உள்ள படங்களையும் தயாரித்துள்ளார். கன்னட திரையுலகிலும் இவர் படங்களை தயாரித்து நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஜி. ராமசந்திரனின் மனைவி ஆர்.பி. பூரணி சமீபத்தில் தான் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மனைவியின் பிரிவால் வாடி வந்த இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மதியம் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *