ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வெறும் 40 நிமிடங்களே போதும் – Tamil VBC

ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வெறும் 40 நிமிடங்களே போதும்

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் உருவாகிறது.

இதனால், கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் உருவாகிறது.

இதையடுத்து, லிங்க முத்திரை செய்வதால் நெற்றி, மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதிகளில் 1 டிகிரியில் இருந்து 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும், உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள சளி கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாகவே அதிகரிக்கும் என்கிறார் சித்த மருத்துவர்..

மேலும், உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த லிங்க முத்திரையை செய்யலாம். லிங்க முத்திரை அபரிமிதமான உஷ்ணத்தை உருவாக்கும் என்பதால், 4 மாதம் வரையிலான இளம் கர்ப்பிணிகள் இதை செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆனால் சிறுவர்கள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த லிங்க முத்திரையைச் செய்யலாம்.

லிங்க முத்திரை செய்முறை

  • இரண்டு கைகளின் விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக் கொள்ளவும்.
  • இடது கை கட்டை விரலை மட்டும் நேராக இருக்கும்படி மேலே தூக்கவும்.
  • ஓர் உள்ளங்கையால் இன்னோர் உள்ளங்கையில் அழுத்தம் கொடுக்கவும்.
  • அடுத்து இடது கை கட்டை விரலை மடக்கி, வலது கை கட்டை விரல் மேல் இருக்கும்படி உள்ளங்கையில் அழுத்தம் கொடுக்கவும்.
  • பத்மாசன நிலையில் அமர்ந்து செய்தால் முழுப்பலனும் கிடைக்கும். பத்மாசன நிலையில் செய்ய முடியாதவர்கள் அவர்களுக்கு வசதியான நிலையில்கூட செய்யலாம்.
  • லிங்க முத்திரை யோகா செய்யும்போது, முதுகு வளைவின்றி நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

மேலும், ஒரு நாளில் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். ஒரே நேரத்தில் செய்வதாக இருந்தால் அதிகாலை சூரியனின் வெப்பம் அதிகமாகும் முன் செய்யலாம். அல்லது 15 நிமிடங்கள் எனக் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களும் செய்யலாம்” என்று விளக்கினார்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *