ஜுன் மாத கிரகப்பெயர்ச்சி:: எந்த ராசிக்கு எல்லாம் எப்படி இருக்கப் போகிறது தெரிமா? – Tamil VBC

ஜுன் மாத கிரகப்பெயர்ச்சி:: எந்த ராசிக்கு எல்லாம் எப்படி இருக்கப் போகிறது தெரிமா?

ஜூன் மாதம் சற்று சவாலானதாகத் தான் இருக்கும்.ஜூன் மாதத்தில் நடக்க உள்ள சில கிரக பெயர்ச்சி மற்றும் கிரக அமைப்பின் காரணமாக கொரோனாவால் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தாண்டி, சில இயற்கை பேரிடரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அதைத்தாண்டி, ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனா ஜூன் மாதத்தில் குறைந்து உயிரிழப்புகள் குறையும் என்பதையும் கூறுகிறது.

செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தாங்கள் இருக்கக்கூடிய இடத்திலிருந்து மாற்றத்தை சந்திக்க உள்ளன. மாத தொடக்கத்தில் மிதுனத்தில் இருக்கும் செவ்வாய் கடக ராசிக்கும். அதன் பின்னர் ஜூன் 3ல் புதன் பகவான் ரிஷப ராசிக்கு வக்ர பெயர்ச்சி ஆகிறார்.

அதே போல ஜூன் 15ல் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். ஜூன் 22ல் சுக்கிரன் கடக ராசிக்கு மாறுவார். மேலும், வக்ர பெயர்ச்சி அடையும் கிரகங்களில் புதனும் ஒன்று. வக்ர கதியாக மிதுனம் மற்றும் ரிஷபத்திற்கு செல்லும் புதனால் பொருளாதார ரீதியாக இந்தியா சில சாதகமான பலன்களைப் பெறமுடியும்.

நிதி நெருக்கடியைப் போக்க அரசாங்கம் புதிய திட்டங்களை உருவாக்கும். வணிகத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றம், மாற்றத்தை சந்திக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நேர்மறையாக, இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது.

கும்ப ராசியில் அதிசாரமாக இருக்கும் குரு பகவானால் தனி மனிதருக்கும், நாட்டிற்கும், சமூகத்திற்கும் சாதகமானதாக இருக்காது. எதிர்பாராத சில சவால்களை சந்திக்க நேரிடும். அதிலிருந்து வெளியேற நேரம் ஆகலாம்.

இந்த நேரத்தில் மக்கள் தங்கள் உடல்நிலை குறித்து கவனமாக இருக்க வேண்டும். குருவின் அதிசார பெயர்ச்சியில் சாதகமற்ற நேரங்களில் அரசாங்கம் சரியான முடிவை எடுத்தால் நிலைமையை சரிசெய்ய முடியும்.

இல்லையெனில் கொரோனா தொற்றுநோய் மேலும் பரவக் கூடும். ஜூன் மாதத்தில் கிரகங்களின் இயக்கம் உலகளவில் சில சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். செவ்வாய் கிரகம் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் ஆசியா கண்டத்தின் பல நாடுகளில், கனமழை மற்றும் புயல்களால் சாதாரண வாழ்க்கை பாதிப்பு அடைய வாய்ப்பும் உள்ளது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *