கடக லக்னத்தில் உள்ளவர்களுக்கு சந்திர திசையால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள் – Tamil VBC

கடக லக்னத்தில் உள்ளவர்களுக்கு சந்திர திசையால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள்

கடக லக்னத்தின் அதிபதி சந்திர பகவான். சந்திர பகவான் இங்கு ஆட்சி பெற்று திசை நடத்துவதால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

செய்யும் செயல்களால் கீர்த்தி அதிகரிக்கும். மேலும், கருப்பு நிறத்தில் உள்ள சாளக்கிராமம் கல் ஆனது விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது.

இது இருக்கும் இடத்தில் வசிப்பவர்களுக்கு பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும். வீட்டில் சுபச்செயல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

குடும்ப நபர்களிடம் ஆதாயமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.

பரிகாரம்

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *