கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யும் விராட் – அனுஷ்கா; குவியும் பாராட்டுக்கள்! – Tamil VBC

கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யும் விராட் – அனுஷ்கா; குவியும் பாராட்டுக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்த காரணத்தினால் பல கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவால் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால், உயிரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் பல பிரபலங்கள் நிறுவனங்கள் என உதவி செய்து வருகின்றனர்.

ஐபிஎல், தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல கிரிக்கெட் வீரர்களும், உதவிக்கரம் நீட்ட, தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் 2 கோடி ரூபாய் உதவி செய்துள்ளார்.

இது குறித்து அனுஷ்கா சர்மா, விராட்கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அதில் “நம்முடைய நாடு கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்து போராடி வருகிறது. நம்முடைய மருத்துவ கட்டமைப்பு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

மேலும், மக்கள் அவதியுறுவதை பார்க்கும்போது பெரும் துயரமாக இருக்கிறது. இதனால் நானும் விராட் கோலியும் இணைந்து கொரோனா தடுப்பு பணிக்காக நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்குகிறோம்”

மேலும், #InThisTogether என்ற ஹாஷ்டேக் மூலம் ‘கெட்டோ‘ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிதி திரட்டுகிறோம். இந்த கடிமான காலத்தை நாம் எல்லோரும் இணைந்து எதிர்கொள்வோம்.

இந்தியர்களான நாம் இந்தியர்களுக்காக துணை நிற்போம். உங்களுடைய சிறு பங்களிப்பு இந்த கடினமான காலத்தை எதிர்கொள்வதற்கு உதவும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கெட்டோ’ என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ள அவர்கள், முதல் ஆளாக அதில் ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளனர்.

அந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வலைதளம் இன்று முதல் 7 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள்ளாக ரூ.7 கோடி திரட்டுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடங்கியுள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ. 2, 37, 13,595 சேர்ந்துள்ளது. 2732 பேர் நிதியுதவி செய்துள்ளனர். இதனால், ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்ததுடன், உதவும் முன் வந்துள்ளனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *