தங்கம் வாங்க காத்திருப்பவர்களிட்கு நல்ல வாய்ப்பு..! – Tamil VBC

தங்கம் வாங்க காத்திருப்பவர்களிட்கு நல்ல வாய்ப்பு..!

தங்கம் விலையானது தொடர்ச்சியான நான்கு நாள் ஏற்றத்திற்கு பிறகு, நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக சர்வதேச சந்தையில் இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

ஆனால் அதே நேரம் இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு ஆபரணத் தங்கத்தின் விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையில் இன்று தங்கத்தை வாங்கலாமா? வேண்டாமா? சர்வதேச சந்தையின் எதிரொலியாக இங்கு குறைய வேண்டுமே, ஆனால் மாறாக இங்கு அதிகரித்து கொண்டு வருகிறதே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலையில் குழப்பம் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இது மீண்டும் குறையுமா? இல்லை ஏற்றம் காணுமா? ஏனெனில் கடந்த வாரத்தில் 1 வருட குறைந்த விலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஒரு வருட உச்சத்தில் காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது இந்த ஏற்றம் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலையே நிலவி வருகின்றது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்? இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? ஆபரண வெள்ளி விலை எவ்வளவு? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம் என பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

கொரோனா பரவல் குறித்த கவலை கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 1 வருட குறைந்த விலையான 44,100 ரூபாய் என்ற லெவலை தொட்டது. எனினும் இந்த விலையை சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு, தற்போது இந்த விலையில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தற்போது கொரோனாவின் பரவல் பற்றிய கவலையும் அதிகரித்து வரும் நிலையில், இது ஏற்றத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 44,100 ரூபாயினை தொட்ட நிலையில், உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 46,150 ரூபாயாக பார்க்கப்படுகிறது. இதே போல் டாலரிலும் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1760 டாலர்களாகவும், சப்போர்ட் லெவல் 1680 டாலர்களாகவும் உள்ளது. அதோடு டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில் முக்கிய லெவலாக 1750 டாலர் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக சந்தைக்கு இதற்கு மேல் சற்று தொடர்ந்து வர்த்தகமானால், அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

டாலர் மதிப்பு தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்று ஆல் டைம் உச்சத்தினை தொட்டுள்ளது. இது அமெரிக்க பத்திர லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பங்கு சந்தைகள் உச்சத்தினை தொட்டுள்ளன. அதோடு பொருளாதாரம் குறித்த குறியீடுகளையும் ஐ எம் எஃப் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தடுமாறும் காமெக்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.90 டாலர் குறைந்து, 1738.10 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தற்போதைக்கு தங்கம் விலை குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது தற்போது வரையில் நிபுணர்கள் கூறியதை போல, 1660 டாலர்களை உடைக்காமல் மேலேயே உள்ளது. அதேபோல் 1760 டாலர்களையும் உடைக்காமல் காணப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்? தங்கத்தினை பொறுத்த வரையில் இன்று தற்போது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் 1760 டாடலர்களை உடைத்து சென்றால் வாங்கலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களாக விலையினை உடைக்காமல் தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. இதே ஆபரணத் தங்கத்தின் விலையானது தேவை மீண்டு நிலையில், விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *