கனவில் பல்லியை இப்படி கண்டால் என்ன நடக்கும் தெரியுமா ? – Tamil VBC

கனவில் பல்லியை இப்படி கண்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

பொதுவாக பல்லிகள் பற்றிய கனவுகள் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை குறிக்கிறது. பொதுவாக பல்லியை பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பதட்டமான சூழ்நிலையை பற்றி கூறுகிறது.வீட்டின் சுவற்றில் பல்லி ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

பல்லி சுவரில் இருந்து கீழே விடுவதுபோல நீங்கள் கனவு கண்டால் சிறிய விபத்துகள் உங்களுக்கு ஏற்படலாம்
இரண்டு பல்லிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது போல நீங்கள் கனவு கண்டால் அன்றைய தினம் கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும்.பெரிய பல்லி ஒன்று உங்களை தாக்குவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு நெருங்கிய ஒருவர் உங்களுக்கு தீங்கை ஏற்படுத்துவார். நீங்கள் மிகவும் அதிகமாக நம்பி கொண்டிருப்பவர் உங்களுக்கு நல்ல செயல்கள் நடக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்.

பல்லி அதனுடைய வாலை அதுவாகவே துண்டாக்கி கொள்வது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நீங்கள் விவேகத்தோடு தப்பித்துக் கொள்வீர்கள். கடுமையான எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நீங்கள் அதிலிருந்து எப்படியாவது தப்பித்து வெளியே வருவீர்கள் என அர்த்தம்.

பல்லி முட்டையிலிருந்து வெளிவருவது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் விரைவில் ஒரு புதிய காரியத்தை தொடங்குவீர்கள் அதிலிருந்து உங்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக மாறும் என அர்த்தம்.பல்லி ஓடிப்போய் ஓரிடத்தில் ஒளிந்துகொள்வது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நீங்கள் உங்களுடைய விவேகத்தால் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு பல்லியை சாப்பிடுவது போல கனவு கண்டால் இது உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய நல்ல எதிர்காலத்தை பற்றி கூறுகிறது. நீங்கள் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது.

மிகப் பெரிய பல்லியை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் வருங்காலத்தில் நீங்கள் ஒருவரை சந்திப்பதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவீர்கள் என்பதை இது குறிக்கிறது.மறைந்து இருக்கக்கூடிய ஒரு பல்லியை நீங்கள் பார்ப்பது போல கண்டால் நீங்கள் உங்களுடைய திறமைகளை கண்டறிந்து அதன் மூலமாக மிகப்பெரிய அளவில் முன்னேறுவீர்கள் என்பதை இது குறிக்கிறது.

பல்லியை நீங்கள் கொல்வதுபோல உங்கள் கனவில் கண்டால் நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை பிரிந்து விடலாம் என்பதை இது குறிக்கிறது.பச்சை நிற பல்லியை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில சறுக்கல்கள் ஏற்படும், ஆனால் அதிலிருந்து எப்படியாவது நீங்கள் விடுபட்டு வெளியே வருவீர்கள் என்பதை குறிக்கிறது.நீங்கள் அழகான ஒரு பல்லியை உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய சவால்களை எல்லாம் மிகவும் கவனமாக எளிதாக முறியடிப்பீர்கள் என்பதை இது குறிக்கிறது.

ஒரு பல்லி உங்களை கடிப்பது போல நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு எதிரானவர்கள் உங்களை துன்பப்படுத்துவதை இது குறிக்கிறது. மனதளவில் நீங்கள் பிறரால் காயப்படலாம்.நீங்கள் ஒரு பல்லியை கடிப்பது போல கனவு கண்டால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய விபத்துகள் ஏற்பட்டு உங்கள் உடலில் காயங்கள் ஏற்பட போகிறது என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் ஒரு பல்லியை பிடிப்பது போல கனவில் கண்டால் நீங்கள் காதலில் ஜெயிப்பீர்கள் என்பதை இது குறிக்கிறது. அதாவது உங்களுடைய திருமண வாழ்க்கையில் நீங்கள் உங்களுக்கு பிடித்தவரையே திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. ஆனால் நீங்கள் பல்லியை பிடிக்கும் பொழுது அதை தவற விடுவது போல கனவு கண்டால் நீங்கள் நேசிப்பவரை திருமணம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதை இது குறிக்கிறது.பல்லி சுவரில் வலது பக்கமாக மேலே பார்த்து ஊர்ந்து செல்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள் என குறிக்கிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *