தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
ஒவ்வொரு கட்சியினதும் பிரச்சார பணிகள் தீவிரமாக முடக்கி விடப்பட்டுள்ளது.
ஆட்சியை பிடிப்பதற்காக திமுக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபா விலை அறிவித்துள்ளது தனிக்கதை.
உலக நாயகன் கமல் வேறு குறுக்க மறுக்க ஓடித்திரிகிறார்.
எடப்பாடி அரசு அதிகார பலத்தை வைத்து சில ஏற்பாடுகளை செய்தபோதும், எதிர்பாரா விதமாக சின்னம்மா சிறையிலிருந்து வெளியேறி கட்சியை பிரிக்க டிடிவியுடன் இணைந்து பல வேலைகளை செய்து வருகின்றார்.
இதை விட பாஜக எதிர்ப்பு அலை வேறு அதிமுக கூட்டணிக்கு ஒரு பின்னடைவினை ஏற்படுத்த போகின்றது.
அம்மா இல்லாத வெறுமை கட்சியில் அப்பட்டமாக தெரிகிறது.
சீமான் வழக்கம் போல வந்தால் மலை போனால் கூந்தல் என மேடைகளில் கிழித்து தள்ளுகிறார்.
பேசவே முடியாத நிலையிலிருக்கும் கேப்டன் விஜயகாந்தினை ஒரு நூலில் ஆடும் பொம்மை போல பாவித்து பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
நல்ல மனிதர் அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி பார்க்க பாவமாய் இருக்கிறார்.
இந்த புயலில் சிக்கி இருக்கும் வீ்டின் கூரையும் பிய்த்துக்கொண்டு போய்விடும் என நன்கு உணர்ந்துகொண்ட ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவேன் என சொல்ல போவதில்லை என அறிவித்து விட்டார்.
அடுத்த முதலமைச்சர் நாற்காலியில் அமர தகுதியானவர் ஆரி அண்ணா தான் என டிவி பைத்தியங்கள் சில சமூக வலைத்தளங்களில் கூவ ஆரம்பித்துள்ளது தனி காமடி.
விக் வைத்து களமிறங்கியிருக்கும் தளபதி ஸ்டாலின் இந்த குழம்பிய குட்டையிலாவது மீன்பிடிக்க முடியுமா என முயற்சித்து கொண்டிருக்க
தளபதி விஜய் தற்போதைக்கு அரசியல் கிடையாது அப்பா எஸ்ஏசி என் பெயரை பயன்படுத்தி ஆரம்பித்த கட்சியில் ரசிகர்கள் இணைய வேண்டாம் என கூறினாலும் அவரது எதிர்கால அரசியலின் ஆரம்ப புள்ளியாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
எம்ஜீஆர், கருணாநிதி, ஜெயலலிதா, கமல், ரஜினி, விஜய், சீமான், விஜய காந், உதயநிதி ஸ்டாலின் இப்படி சினிமா காரர்களை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் தலையெழுத்து தமிழகத்திற்கு வாய்த்திருப்பது ஆரோக்கியமானதல்ல.
ஏன் ஒரு படித்த பட்டதாரி ஒருவரோ, விஞ்ஞானி ஒருவரோ, கணித மேதை ஒருவரோ தேர்தலில் தோற்றுக்கொண்டிருப்பது சோகமானது.
பிரதான இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஊழல் செய்தாலும் மக்கள் அவற்றை உடனுக்குடன் மறந்து மன்னித்து அவர்களையே மாறி மாறி ஆட்சியில் அமர வைக்கின்றார்கள்.
இம்முறை பொதுமக்களிடம் Tamil VBC மேற்கொண்ட கருத்து கணிப்பில் பலரும் ஆட்சி செய்யும் தரப்பின் மீது வெறுப்பில் இருந்தாலும் திமுக மற்றும் ஏனய கட்சிகளின் மீதும் வெறுப்பிலேயே உள்ளமை தெரிய வந்துள்ளது.
யார் வரவேண்டும் என்பதை விட “ஐயோ இவரா?“ இவர் இத்தனை குற்ற சாட்டுக்களுக்கு ஆளானவர் அதனால் இவர் வரக்கூடாது என ஒவ்வொருவரும் பல அரசியல் தலைவர்கள் மீது பல குற்ற சாட்டுக்களை அடுக்குகின்றனர்.
உங்கள் கருத்து என்ன யார் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
கமண்ட் செய்யுங்கள்.