இறவன் தந்த இந்த வாழ்வில் சுவையான உணவுகளை அனுபவித்து உண்ணவேண்டும் என ஆர்வம் கொண்டவரா நீங்கள்?
மூங்கில் பிரியாணி அல்லது புரியாணி திண்டிருக்கிறீங்களா? அல்லது சாப்பிட்டுள்ளீர்களா?
இந்த ஆரோக்கியம் தரும் சுவையான உணவை வீட்டிலேயே சமைப்பது எப்படி?
முதலில் மூங்கில் கழி என்றினை எடுத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு கணு இடைவெளி இருக்குமாறு வெட்டிக்கொள்ளுங்கள்.
மூங்கில் மரத்தில் 45 ஆண்டுகளுக்கொரு முறை மூங்கில் அரிசி கிடைக்கும் அதிலும் புரியாணி சமைக்கலாம். யானை பலம் வரும் என்பார்கள்.
அது கிடைக்காவிடில் சாதாரண அரிசி அல்லது பாஸ்மதி அரிசி பயன்படுத்துங்கள்.
சுவைக்கும் பிரியாணி கெடாமலிருக்கவும் லவங்கம் (கறுவா) இலையினை சேர்த்துக்கொள்ளுங்கள்.
மூங்கிலின் ஒரு புறம் கணு அடைத்திருக்கும் மறுபுறம் பப்பரப்பே என திறந்திருக்கும்.
அதனுள் இறைச்சி மற்றும் அரிசியை நிரப்புங்கள்.
ஐட்டம் சமைக்கும் போது வெளியே கொட்டிவிடாதிருக்க வாழை அல்லது கொய்யா இலைகளை வைத்து அடைத்து அதன் மேல் மைதா (கோதுமை) மாவினை நீருடன் பிசைந்து அதை வைத்து ஒட்டி விடுங்கள்.
இனி மூங்கில் கழிகளை கற்களின் மேல் அடுக்கி கீழே விறகினை வைத்து எரியுங்கள்.
எல்லா பக்கமும் நெருப்பு படுவதற்கு அவ்வப்போது புரட்டி போடுங்கள்.
இனி நெருப்பிலிருந்து மூங்கில்களை எடுத்து மைதாவை அகற்றி இலைகளை எடுத்துவிட்டு வாழை இலை மீது பரப்புங்கள்.
அவ்வளவு தான் வாழ்வில் காணாத சுவையுடன் பகிர்ந்து சுவையான மூங்கில் பிரியாணியை உண்ணுங்கள்.
இந்த தகவலையும் நண்பர்களுக்கும் செயார் செய்யுங்கள்.
இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சுது!