பிக்பாஸ் ஆரி அடுத்தபட அறிவிப்பு – பாலா நினைத்தால் தான் சாத்தியம். ஹீரோயின் யார் தெரியுமா? படத்தின் கதை என்ன? – Tamil VBC

பிக்பாஸ் ஆரி அடுத்தபட அறிவிப்பு – பாலா நினைத்தால் தான் சாத்தியம். ஹீரோயின் யார் தெரியுமா? படத்தின் கதை என்ன?

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களை மக்கள் செல்வாக்கு பெற காரணமாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரி பாலா முரண்பாடுகள் மற்றும் நட்பு இவற்றினை சுற்றியே அமைந்திருந்தது.

ஒரு புறம் அர்ச்சனா அணியின் அட்டகாசங்கள், மறுபுறம் ஆரி பாலா மாறிமாறி குற்றச்சாட்டுக்களை அடுக்குவது என தீப்பற்றி எரிந்தது.

ஆரி ஆதரவாளர்கள் என்ற புதிய கூட்டம் தமிழ் மக்களிடையே உருவாகியது.

சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஓவியா ஆர்மி என்ற பாரிய சுனாமியை பேலல்லாது ஆரி ஆதரவாளர்கள் பொங்கும் அலையாக உருவாகியது.

பிக்பாஸ் முடிந்துவிட்டது.

ஆரி ஏற்கனவே சிலபடங்கள் நடித்திருந்தாலும் அவை சரியாக போகாததால் மக்களிடம் செல்வாக்கினை பெற சமூக சேவைகளை கையில் எடுத்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒருவருக்கு வழங்கப்படுவதே அதை நடாத்தும் எண்டமோல் நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும். காரணம் அப்போது தான் நிகழ்ச்சி முடிந்தாலும் மக்கள் அடுத்த பல நாட்களுக்கு அதைப்பற்றியே பேசுவார்கள் என்பது அவர்கள் பின்பற்றும் பாணி.

ஆனால் இந்த தடவை நிகழ்ச்சியை நடத்தும் கமலின் கட்சி பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பதாலும் அடுத்து தேர்தல் நெருங்குவதாலும் அவர் பிக்பாஸில் வழங்கும் தீர்ப்பு தவறானால் அது அரசியல் வாழ்க்கையிலும் அவருக்கு கிடைக்க போகும் வாக்குகளை குறைக்கும்.

அதனால் ஆரிக்கு கப்பு வழங்கப்பட்டது.

ஆரியும் எதற்கெடுத்தாலும் கப்பு ஜெயிக்கிறதுக்கு இது சரிவராது, கப்பு ஜெயிக்கிறதுக்கு அது சரியாயிருக்கும் என சதா நேரமும் கப்பை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

Big boss Tamil ல் மட்டுமல்ல அதை தாண்டியும் பாலா ஆரி ஹீரோ வில்லன் சம்பவங்கள் தொடர்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

ஆரிக்கு கப்பு வழங்கப்பட்டாலும் ஆரிக்கு உருவாகிய ஆதரவு அலை காரணமாக ஒரு நிபந்தனையும் கொடுக்கப்பட்டது.

அதாவது தேர்தலில் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பாக பிரச்சாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அது.

ஆரி ஏற்கனவே மய்யம் கட்சியின் உறுப்பினர் என்பதால் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டு கப்பு ஜெயிச்சார்.

நடுவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வாங்க ஆளின்றி திரையரங்கு கிடைக்காமல் காத்திருந்த படமான பகவான் என்ற சுமாரான படத்தையும் இது தான் சமயம் என விளம்பர படுத்தினார் அதன் தயாரிப்பாளர்.

இதே போல தான் ஜெயம் ரவியின் பூமி படமும் பிக்பாஸில் விளம்பரப்படுத்தப்பட்டு ஓடிடியில் வெளியாகியது. பார்த்த ரசிகர்கள் தான் பரிதாபம்.

தற்போது ஆரி ப்ரோ அடைந்திருக்கும் புகழுக்கு அடுத்து அவர் நடிக்க போகும் படம் பெரிய பட்ஜெட் மற்றும் பலமான கதை உள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்த ஆரி பிரபல இயக்குனர்களிடம் தினமும் கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.

அதில் ஒரு கதை அவருக்கு பிடித்துபோயுள்ளது.

கூடவே இயக்குனர் விதித்த சில நிபந்தனைகள் அவரை சிந்திக்க வைத்துள்ளது.

அப்படி என்ன தான் நிபந்தனைகள்?

முதலில் இந்த படத்தில் ஆரி ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரியாக நடிக்க இருக்கின்றார்.

நகைச்சுவைக்கு ரியோவினை அணுகியபோது அவர் மறுத்ததால் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

Bigboss Aari க்கு நடனம் மற்றும் நகைச்சுவை காட்சிகள் இல்லாத கதையாக திரைக்கதையினை மாற்றும்படி ஆரி தரப்பிலிருந்து கோரப்பட்டுள்ளது.

நேர்மையான போலிஸ் அதிகாரி என்பதால் நெருக்கமான காதல்காட்சிகளை தவிர்க்கும் படி ஆரி அண்ணா குடும்பத்திலிருந்து அன்புக்கட்டளை விடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் வில்லனாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ். இவர் ஒரு திருடனாக வருகின்றார்.

பணக்காரர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் கருப்பு பணத்தினை திருடுவது இவர் வேலை. அதை கண்டுபிடிக்க களம் இறக்கப்பட்டுள்ளவர் கதாநாயகன் ஆரி.

இறுதியில் அந்த பணத்தை பாலா என்ன செய்தார் என்பது கிளைமாக்ஸாம்.

சென்னை கூவநதி சேரிப்பகுதிகளில் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம்.

படத்தின் கதாநாயகியாக லாஸ்லியா அல்லது ஓவியாவினை நடிக்க கேட்டுள்ளனராம்.

வில்லன் பாலாவின் ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளாராம்.

சிவானியை மக்கள் அதிகமாக வெறுப்பதாலும் சிவானியின் தாயார் விரும்பாததாலும் ரம்யாவினை அணுகியுள்ளனர் படக்குழுவினர்.

மறுபுறம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக சிலபடங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

முதலாவதாக வெளியாக போகும் தங்கள் படம் பாரிய வெற்றி அடைய வேண்டும் என இருவரும் படத்தின் கதைகளை கவனமாக தேர்வு செய்கின்றனராம்.

பாலா ஆரியின் படத்தில் வில்லனாக அறிமுகமானாலும், பாலா கதாநாயகனாக நடிக்கும் படமே முதலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றது. அதனால் இந்த ஆரி படம் பாலா கால்ஷீட் கொடுத்த பின் தான் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கின்றது.

எது எப்படியோ இனி ஆரி பாலா இருவரையும் வெள்ளித்திரையில் காண வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

எம்ஜீஆர் சிவாஜி
ரஜினி கமல்
விஜய் அஜித்
விக்ரம் சூர்யா
தனுஷ் சிம்பு
சிவகார்த்த்திகேயன் விஜய் சேதுபதி

இவர்கள் வரிசையில் ஆரி பாலா என்ற நட்சத்திரங்களும் போட்டிபோட்டு பிரகாசிக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது பற்றி குறிப்பிடுங்கள்.

இந்த தகவலை உங்கள் ஆரி ரசிகராக இருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *