விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது.
கோவிட் 19 காரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விஜயயின் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டுடன் திறக்கப்பட்டன.
பெரிய கதாநாயகர்கள் அமேசன் ப்ரைம், நெட் பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டால் அவர்களது படங்களை திரயரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில் மாஸ்டர் திரையரங்கில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் வெளியாகியது.
ஒரு வருடத்துக்கு பின்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் திரையரங்கில் ஒரு படத்தை பார்க்க சென்ற வரலாறும் நடந்தேறியது.
அதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் அனைத்து சினிமா ரசிகர்களும் திரையரங்குகளுக்கு சென்றதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வசூல் அள்ளியது.
ஆனால் விஜய் ரசிகர்கள் தங்கள் தலைவனிடம் எதிர்பார்த்த விறுவிறுப்பு மாஸ்டர் படத்தில் சற்று குறைவாக இருந்ததால் சிறிது ஏமாற்றமடைந்தனர்.
மறுபுறம் தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய் நடிப்பினை விட விஜய் சேதுபதி நடிப்பினை பாராட்டித்தள்ளியுள்ளனர்.
நடுவில் விஜய்யின் தந்தை விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து அதில் விஜய் மக்கள் மன்றத்தினரை இணைக்க முயல நடிகர் விஜய் தான் உலகுக்கு வருவதற்கும் சினிமாவிற்கு வருவதற்கும் காரணமான தன் தந்தையையே எதிர்த்து மறுப்பு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.
இதைவிட மாஸ்டர் படத்தில் கதாநாயகன் கிறிஸ்தவ மதத்தவராகவும் வில்லன் தீவிர இந்து மதத்தவராகவும் காண்பிக்க மத அமைப்புகளும் ஒருபுறம் எதிர்ப்பினை காண்பித்தன.
படத்தில் எதற்காக இருக்கிறோம் எனவே தெரியாமல் சாந்தனு என்ற நட்சத்திர நடிகரும் ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக வந்து போக மீம் கிரியேட்டர்கள் அதனை கலாய்த்து தள்ளியுள்ளனர்.
தன் ரசிகர்களையும் தன் தந்தை தன் பெயரில் ஆரம்பித்துள்ள கட்சியில் இணைய வேண்டாம் என அறிவிக்க விஜய் ரசிகர்கள் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாத நிலைக்கு ஆளாகினர்.
விஜய்க்கு நெருக்கமான சிலர் தளபதி இனிமேல் இன்னொரு நடிப்பு திறண் அதிகம் கொண்ட கொண்ட கதாநாயக நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
நண்பன் படத்தில் நடித்தனை போல ஜீவா, ஸ்ரீ காந் அல்லது சாந்தனு போன்ற சுமாரான நடிகர்களுடன் இணைந்து நடிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே அஜித்துடன் இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ன முடிவினை எடுத்தது விஜய் மற்றும் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் ரஜினி உட்பட பல நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.
பல நடிகர்கள் இணைந்து நடிப்பது இந்தி மற்றும் ஹாலிவூட் சினிமாவில் சாதாரணமாக கருதப்பட்டாலும் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு நடிகரை விட இன்னெரு நடிகர் பேசப்படும் போது அந்த நடிகரின் நடிப்பு திறமை மீது ஒப்பிட்டு மக்கள் பேசுவது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது.
அது அந்த நட்சத்திர நடிகரின் ரசிகர்களுக்கும் ஜீரணிக்க முடியாததாகி விடுகின்றது.
ஒரு வருடத்திற்கு பின் திரையரங்கு திறக்கப்பட்டு விஜய் படம் திரையரங்கில் வெளியாகி தமிழ் சினிமா துறையினருக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் தல அஜித் ரசிகர்கள் இன்னமும் யாரிடம் சென்று வலிமை அப்டேட் கேட்கலாம் என காத்திருக்கின்றனர்.