இந்தியாவை சேர்ந்த சிங்கபெண்ணால் சாத்தியமாகிய செவ்வாய் விண்வெளி பயணம் ! – Tamil VBC

இந்தியாவை சேர்ந்த சிங்கபெண்ணால் சாத்தியமாகிய செவ்வாய் விண்வெளி பயணம் !

விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியது… செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்…
எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார்.

பெங்கலூருவில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துத இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி இன்றைய வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்த்த போது பெருமையாக இருந்தது…

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *