சென்னையில் ஆன்லைன் வகுப்பில் படிக்க வந்த மாணவிக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக கூறி வன்கொடுமை செய்த தோழியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு தாமோதரபுரம் புது தெருவில் வசிப்பவர் சசிகுமார் (43). இவர் அந்த பகுதியில் வீடு புரோக்கராக உள்ளார். அத்துடன் கட்டுமான தொழிலும் செய்து வருகிறார்.
இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.
எதிர் வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமியும், சசிகுமாரின் மகளும் ஒரே வகுப்பில் படிப்பதோடு தோழியாகவும் இருந்துள்ளனர்.
தினசரி தனது தோழியுடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக எதிர் வீட்டு சிறுமி, சசிகுமார் வீட்டுக்கு வந்து செல்வதும், பாடத்தில் சந்தேகம் என்றால் தோழியின் அப்பா சசிகுமாரிடமும் சந்தேகம் கேட்பது வழக்கமாக இருந்துள்ளது.
அப்படித்தான் கடந்த 6ம் தேதி தனது வீட்டுக்கு வந்த எதிர் வீட்டு சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி சசிகுமார் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்து, சசிகுமாரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.