வடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..! மீண்டும் ஆரம்பமாகும் கனமழை..!! – Tamil VBC

வடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..! மீண்டும் ஆரம்பமாகும் கனமழை..!!

இலங்கைக்கு தெற்கே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளமையால், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நாளையும் நாளை மறுதினமும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைகழக புவியல்துறை மூத்த விரிவுரயாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.இது குறித்த அவரது எச்சரிக்கையில்,இலங்கைக்கு தெற்கே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளமையால் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நாளையும் (20.01.2021 – சிலவேளை 19.01.2021 நள்ளிரவே ஆரம்பிக்கலாம்) மற்றும் நாளை மறுதினமும்(21.01.2021) மிதமான மழைக்கு (சில இடங்களில் தூறல் மட்டுமே) வாய்ப்புள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் 28.01.2021 முதல் 08.02.2021 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மாகாணம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.விவசாயிகளைப் பொறுத்தவரை இது மிகவும் கவலையான செய்தி. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெங்காயச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் வன்னிப் பெருநிலப்பரப்பில் உழுந்து போன்ற சிறுதானிய செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இது மிகவும் கவலையான செய்தி.விவசாயிகள் பலர் தமது அறுவடையை பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த மழை அவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தலாம்.எனவே, முன்கூட்டிய திட்டமிடல்கள் மூலம் இழப்பை கணிசமான அளவு குறைக்க முடியும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *