வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய தகவல்..மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.. சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..!! – Tamil VBC

வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய தகவல்..மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.. சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..!!

21ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அமைச்சர் இதை குறிப்பிட்டார்.இது ஒரு தேசிய பொறுப்பு மற்றும் கடமை என்று கருதி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் சுற்றுலா விசாக்கள் பெற்றவர்கள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இதில் பயன் பெறவுள்ளனர்.மேற்குறித்த நபர்கள் இந்த திட்டத்தால் நாட்டுக்கு வருவது சாத்தியமானது என்றும் அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தெரிவித்தார்.இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *