பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..அனைவருக்கும் பகிருங்கள்.. – Tamil VBC

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..அனைவருக்கும் பகிருங்கள்..

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும். எல்லோரும் எதிர்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் எனச் சொல்லக்கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும்.மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதங்களாகும்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாதப் பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்துப் பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும்.தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி நேரத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.மகர என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும். ஆகையால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களை நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிட்டும். இந்தாண்டு தை 1ஆம் திகதி (15.01.2021) வியாழக்கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கலாம்?- பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று ஜோதிடகேசரி பஞ்சாட்சர சர்மா கணித்து வழங்கியுள்ளார்.

காப்பு கட்ட:மார்கழி மாதம் 29ஆம் திகதி – 13.01.2021 – புதன்கிழமை – காலை 9.00 – 10.30

பொங்கல் வைக்க நல்ல நேரம்:தை மாதம் 01ஆம் திகதி – 14.01.2021 – வியாழக்கிழமை – காலை 7.30 – 9.00 ,தை மாதம் 01ஆம் திகதி – 14.01.2021 – வியாழக்கிழமை – காலை 10.30 – 12.00.,மாட்டுப் பொங்கல் அன்று பூஜை செய்ய நல்ல நேரம்:தை மாதம் 02ஆம் திகதி – 15.01.2021 – வெள்ளிக்கிழமை – காலை 9.00 – 10.30கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:தை மாதம் 03ஆம் திகதி – 16.01.2021 – சனிக்கிழமை – காலை 7.30 – 9.00,தை மாதம் 03ஆம் திகதி – 16.01.2021 – சனிக்கிழமை – காலை 10.30 – 12.00உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?-காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனை அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தைச் செய்யலாம்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *