உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள் – Tamil VBC

உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்

நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும்.

நம்முடைய சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம்.சமையலறை
பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை. அதுவும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் குறைவாக புழங்க வேண்டும் அப்போதுதான் அந்த வீட்டில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். பழங்கால வீடுகளில் சமையலறை பெரியதாக இருக்கும். ஒருபக்கம் அமர்ந்து காய் வெட்டுவார்கள். ஒருபக்கம் சமையல் செய்வார்கள். இப்போது சமையல் அறை சுருங்கி விட்டது.

அக்னி மூலை
சமையலறை தென்கிழக்கு மூலையில் சரியாக அக்னி மூலையில் அமைந்தாலே பாதி வெற்றி கிடைக்கும். பல வீடுகளில் அக்னி மூலையில் சமையல் அறை அமைக்க முடியாமல் வாயு மூலையான வடமேற்கு மூலையில் சமையல் அறை அமைந்து விடும். அதுபோன்ற நேரங்களில் தென் கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து நின்று சமைப்பது போல அமைப்பது நல்லது. பாத்திரம் துலக்கும் சிங்க் வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும்.

சமையலறை டிப்ஸ்
சமையலறை தூய்மையானதாக இருக்க வேண்டும். அதிக ஈரமில்லாமல் உலர்வாக இருந்தால் மட்டுமே சமையலறையில் சுக்கிரனின் காரகத்துவம் அதிகம் இருக்கும். சமையலறையில் அதிகம் தண்ணீர் பயன்படுத்தினால் அந்த வீட்டில் செல்வம் குறையத் தொடங்குமாம் அதனால்தான் தண்ணீரை தங்கம் போல சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

சுக்கிரன் சந்திரன்
தண்ணீர் சந்திரனின் காரகம். சுக்கிரனும் சந்திரனும் அதிகம் இணையக்கூடாது. அக்னி அதிகம் புழங்கும் இடமான சமையல் அறையில் தண்ணீர் அதிகம் புழங்கக் கூடாது என்பார்கள். எனவே தான் முந்தைய காலத்தில் கொல்லைப்புறத்தில் பாத்திரம் துலக்கினார்கள். இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கொல்லைப்புறமெல்லாம் எங்கே இருக்கப் போகிறது எனவே இப்போது இருக்கும் கிச்சனிலேயே சில மாற்றங்களை செய்து கொள்வது அவசியம்.

செல்வம் தரும் வெந்தயம்
நமது கிச்சனில் அரிசி, பருப்பு நவதானியங்களை எப்போதும் நிறைவாக வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் ஒரு கிண்ணத்தில் வெந்தயத்தையோ, நவதானியத்தையோ போட்டு திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். மளிகைப் பொருட்களும் எண்ணெய் வகைகளும் குறைவின்றி இருந்தாலே செல்வம் பெருகும். சமையல் செய்யும் போது அந்த தானியங்களையோ, வெந்தயத்தையோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

சுக்கிரன் சனி கூட்டணி
முன்பெல்லாம் விறகு அடுப்பில் சமைப்பார்கள். அடுப்பங்கறை கருப்பாக இருக்கும். கருப்பு சனியின் அம்சம். சுக்கிரனும் சனியும் நண்பர்கள். இப்போதைய சமையல் அறையில் கரி பிடிக்க எல்லாம் விடுவதில்லை துடைத்து எடுத்து சுத்தமாக வைத்திருப்பார்கள். வெளிர் நிற பூச்சுக்களை உபயோகிப்பதை விட கருப்பு நிற டைல்ஸ், கரும்பச்சை நிற டைல்ஸ் ஒட்டலாம். இதன் மூலம் சுக்கிரன் சனி சேர்க்கை ஏற்படும் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *