குப்பைக்குள் தொலைந்து போன ஒன்றரை லட்சம் ரூபா பணம்..தேடிக் கண்டுபிடித்து கொடுத்து துப்பரவு ஊழியர்கள்..!! – Tamil VBC

குப்பைக்குள் தொலைந்து போன ஒன்றரை லட்சம் ரூபா பணம்..தேடிக் கண்டுபிடித்து கொடுத்து துப்பரவு ஊழியர்கள்..!!

ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை நகர மண்டப வீதியில் செவ்வாய்கிழமை காலை வழமைபோன்று, வீடுவீடாக குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் வாகனமொன்றில், தனது வீட்டுக் குப்பை பையினை பெண்ணொருவர் ஏற்றியுள்ளார்.இதேவேளை, வெளியில் சென்றிருந்த அந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது, சிறிய பை ஒன்றினுள் இட்டு, மேசை மீது அவர் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.இது குறித்து கணவர் கேட்டபோது; “குப்பைகளுடன் தவறுதலாக பணமும் சென்றிருக்கலாம்” என மனைவி கூறியுள்ளார்.உடனடியாக கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையாளர் எம்.எம்.எம். றிஸ்வான் என்பவரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட பணத்தின் உரிமையாளர், விடயத்தைக் கூறியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *