யாழில் திடீரென சொர்க்கலோகமாக மாறிய பிரதேசம்.!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்.!! – Tamil VBC

யாழில் திடீரென சொர்க்கலோகமாக மாறிய பிரதேசம்.!! பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்.!!

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முகநூலில் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரிப் பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில் குறித்த கால்வாய் காணப்படுவதுடன் இது கடந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.குறித்த நீர் வாய்க்காலுடன் மரங்கள் ஒன்று கூடி பச்சைப் பசேலென அழகானதும் அமைதியான வயல் பகுதி அங்கு செல்வோரை இனம்புரியாத அமைதியில் ஆழ்த்துவதாக கூறப்படுகின்றது.இதனால் பொதுமக்கள் கொரோனாவையும் பொருட்படுத்தாது இப்பிரதேசத்திற்கு அண்மைய நாட்களில் படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *