ஒக்டோபர் 4 ஆம் திகதி 16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், அர்ச்சனா, சுஜித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்தனர்.
அதில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.
மேலும் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட போது பார்வையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன் சமூகவலைதளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டனர்.
ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சேராமல் தனித்து விளையாடிய சனம் ஷெட்டியை கமல்ஹாசனும் பிக்பாஸ் மேடையில் பாராட்டியிருந்தார்.
இந்தநிலையில் பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சனம் ஷெட்டி இன்னும் தனது சொந்த வீட்டுக்கு செல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு கடந்த சீசனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வனிதா வெளியேற்றப்பட்டு சில நாட்களில் மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தமை குறிப்பிடத்தக்கது.