சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பில் வெளியான உண்மை ! – Tamil VBC

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பில் வெளியான உண்மை !

சின்னத்திரை தற்கொலை செய்துக்கொண்ட செய்தி தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பதிவு திருமணம் முடிந்ததாக கூறப்படுகின்ற நிலையில், நேற்று இரவு தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந் நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சித்ராவின் கழுத்தில் இருக்கும் காயம், அவர் புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டனால் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் அவரின் கன்னத்தின் ரத்தம் காயத்துடன் இருக்கும் நகக்கீரல்கள் தற்போது சந்தேகத்தை கிளம்பி இருக்கிறதுஅதனால் சித்ராவின் கன்னத்தில் இருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் சித்ராவின் தாயாருக்கும் ஹேமந்துக்கும் தொடர்ச்சியாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முதல் சித்ராவும் ஹேமந்தும் அறை எடுத்து தங்கி வந்து இருக்கிறார்கள்.

சித்ராவும் அவரது கணவரும் ரூமுக்கு வந்ததே நள்ளிரவு 2.30 மணிக்கு தான் என்றும் 3 மணிக்கு சித்ராவின் தற்கொலை நடந்துள்ளது என்றும் இடைப்பட்ட அரை மணி நேரத்தில் தகராறு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் இதனால் மனமுடைந்து சித்ரா இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்றும் என்ன பிரச்சனை என விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிகின்றார்.

மேலும் தற்போது சிதிராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.இதேவேளை சித்ரா மிகவும் தைரியமான பெண். அவர் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார் என்றும் சித்ராவின் கன்னத்தில் காயம் இருப்பதால் அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் சித்ராவின் தரப்பில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *