கிழக்கு பார்த்த மனையில் ஏற்படக்கூடிய வாஸ்து பிழைகளும்! தீர்வுகளும் – Tamil VBC

கிழக்கு பார்த்த மனையில் ஏற்படக்கூடிய வாஸ்து பிழைகளும்! தீர்வுகளும்

கிழக்கு மனை விசேஷமானது எனென்றால் கிழக்கு பக்கம் திறந்த வெளியாக அமைவதால், நல்ல எனர்ஜி வீட்டிற்குள் வரும் . அத்துடன் கிரகங்களின் தந்தையான சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், சூரிய ஒளியை அதிகமாக பெறுகின்ற பகுதியாகவும் இருகின்றது. மேலும் இவ்வாறான வீட்டில் கிழக்கு சார்ந்து மக்களின் நடைப்புழக்கம் இருப்பதுவும் அதிக நன்மைகளைப் பெற காரணமாக அமைகிறது.
கிழக்கு திசைக்கு அதிபதியாக இருப்பவன் தேவலோகத்தை ஆட்சி செய்யும் இந்திரன் ஆவான். இதனால் கிழக்கு மனை நிருவாகத்துறையில், அல்லது அரசதுறையில் பணிபுரியும் ஆண்களுக்கு மிகவும் நன்மை பயக்கவல்லதாகும். வீட்டில் வசிக்கும் ஆண் வாரிசுகளின் கல்வி உயர்விற்கும் கிழக்கு மனை விசேஷமானது. இல்லத் தலைவரின் வாழ்கை படிப்படியாக முன்னேறிச் செல்லவும், அவரின் சமூக அந்தஸ்து நாளுக்கு நாள் உயரவும் கிழக்கு மனை பங்களிப்பு செய்யும்.
ஆனால் இவ்வளவு நன்மையும் ஏற்பட வீடு வாஸ்து படி அமைந்திருத்தல் அவசியமாகும். இல்லையேல் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். கிழக்கு மனை எவ்வாறு அமைய வேண்டும் என வாஸ்து கூறுகிறது என நோக்குவோம்.

www.keralahousedesigns.com;

1.வீட்டு மதில் சுவர் ஏனைய பகுதிகளை விட சற்று உயரம் குறைவாகவும் துவாரங்களைக் கொண்டும் இருக்க வேண்டும்.
2.கேற் வாசல் உச்சப் பகுதியில் வரவேண்டும். அதாவது கிழக்கின் நடுப்பகுதியிலிருந்து வடக்கு சார்ந்த பகுதியில் வரவேண்டும். தலைவாசலும் அவ்வாறே அமைய வேண்டும்.
3. கிழக்கின் நீச்சப்பகுதியில் தெருக்குத்து வரக்கூடாது.
4. கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருக்ககூடாது . ஏனெனில் சூரிய ஒளி வீட்டிற்குள் வருவதற்கு அவை தடையாக அமையும்.
5. கிணறோ,துளசிமாடமோ, மற்றும் ஏனைய கட்டிட அமைப்புக்களோ வீட்டின் அஸ்திவார உயரத்திற்கு மேல் வரக்கூடாது.
6 . வாசலில் புல் வளர்க்கலாம். எனென்றால் கிழக்கு பச்சைப் பசேல் என்றிருக்க வேண்டும். கிழக்கு பகுதி சுவருக்கு பச்சை வர்ணமே சிறந்ததாகும்.
7 . மேற்கை விட கிழக்கு வாசல் அதிக நிலத்தை கொண்டிருக்க வேண்டும். மேற்கை விட கிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும்.
8. தென்கிழக்கை விட வடகிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும்.
9. தெற்கை விட வடக்கு நிலம் அதிகமாக இருக்கு வேண்டும்.
10. வடகிழக்கு பகுதியில் கிணறு இருக்க வேண்டும்.
வாஸ்து பிழைகளும், விளைவுகளும் :
கிழக்கில் உயரமான மரங்கள் இருப்பது, ஈசானியம் உயர்ந்திருப்பது , ஈசானியத்தில் கழிவுத் தொட்டி இருப்பது, ஈசானியத்தில் குடில் அமைத்து கழிவு பொருட்கள் களஞ்சியப்படுத்துவது, ஈசானியம் வெட்டப்பட்டிருப்பது, வீட்டின் ஈசானிய மூலையில் சமையலறை இருப்பது, ஈசானியம் அடைபட்டிருப்பது, ஈசானியத்தில் அல்லது கிழக்கில் மாடிப்படி வருவது போன்ற காரணங்கள் வீட்டில் இருந்தால் அது ஆண்கள் வாழ்கையை மிகவும் பாதிக்கும்.
அதுபோல் தென்கிழக்கு நீச்சப்பகுதியில் கேற்,தலைவாசல் வருவது். தென்கிழக்கு மூலையில் கிணறு அல்லது கழிவுத் தொட்டி இருப்பது, வடக்கை விட தெற்கில் அதிக நிலம் விடப்படல், தெற்கு பள்ளமாக இருப்பது , எல்லாமே பெண்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *