சாவகச்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென உயிரிழப்பு..!! பிசீஆர் பரிசோதனையின் பின்பே முடிவு..? – Tamil VBC

சாவகச்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென உயிரிழப்பு..!! பிசீஆர் பரிசோதனையின் பின்பே முடிவு..?

சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து, அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார். குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர் எனவும், குறித்த நபருடன் பேலியகொட மீன் சந்தைக்கு செல்லும் நண்பர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த தகவல்களை அவர் மறைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதனால், சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், ஊழியர் அலுவலகத்துக்குள் உட்செல்ல மருத்துவ அத்தியட்சகரால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்ய, உயிரியல் மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன. பிசிஆர் சோதனையின் பின்னரே அவரது இறப்பிற்கான காரணத்தை அறிய முடியும்.அதுவரை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது.வைத்தியசாலையின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *