தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.!! – Tamil VBC

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.!!

உறக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது. சுவாசிப்பதற்குக் காற்று எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு மனிதனின் உடல் சமநிலையாக இருக்கவும், ஆரோக்கியமாக இருப்பதற்குத் தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மைக்கான மருத்துவ காரணங்கள்.படபடப்பு ,கவலைகள், கோவம்.மன உளைச்சல் தேவையில்லாத சிந்தனைகளால் ஏற்படும் கவலை,கோவம்,நோய்களால் ஏற்படும் தூக்கமின்மை ,ஒவ்வாமை ஆஸ்துமா, தைராய்டு  ,ஜீரணக்கோளாறு ,சிறுநீரகக்கோளாறு புற்று நோய் ,எப்போதும் உடல்வலி உயர் இரத்த அழுத்தம், தலைவலி ,விபத்துகளால் ஏற்படும் உடல்நலமின்மை, மருந்துகளால் ஏற்படும் தூக்கமின்மை,மது போதை
தூங்குமிடம் பெட்ரும் சத்தத்துடன் இருப்பது ,வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் தூங்குவது,சத்தம் அதிகம் உள்ள இடத்தில் தூங்குவது ,வெப்ப மற்றும் குளிர் பாதிப்பால் தூக்கமின்மை வருவது ,சரியில்லாத படுக்கை போர்வை மற்றும் தலையணையால் வரும் உறக்கமின்மைமேலே உள்ளவையெல்லாம் ஒரு காரணிகள் என்றாலும் அதற்கு கீழ்க்காணும் கேள்விகளுக்கு சுய பரிசோதனை செய்து பாருங்கள். ஏன் தூக்கம்வரவில்லை என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம் அதிகமான மன அழுத்தம்/மன உளைச்சல்/படபடப்பாகக் கவலையாக உள்ளீர்களா? தாழ்வு மனப்பான்மையோடு இருக்கின்றீர்களா? ,உங்கள் எண்ணம் எப்பொழுதும் கெட்ட அனுபவத்தை நினைத்தே வருத்தப்படுகிறதா? தூங்குவதற்கு மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? எடுத்துக்கொண்டால்தான் தூக்கம் வருகின்றதா?
உங்களுக்கு உடலில் நோய் ஏதாவது இருக்கிறதா? அந்த நோயினால் உங்களுக்குத் தூக்கமின்மை ஏற்படுவதாக நினைக்கின்றீர்களா? நீங்கள் தூங்குமிடம் தூங்கும் சூழ்நிலை உங்களுக்கு ஏற்றவாறு இருக்கின்றதா ?நாள்தோறும் தூங்குவதும்/எழுவதும் ஒரே நேரத்தில் எழுகின்றீர்களா?நீங்கள் தூங்குமிடம் அமைதியாக இருக்கின்றதா? ,நீங்கள் தூங்குமுன் செல்பேசி/ தொலைக்காட்சி தூக்கம் பாதிக்கின்றதா? தூக்கமின்மையால் மறுநாள் எழுந்தபின் உங்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிகுறிகள் தோன்றுகிறதா? தூங்கி எழுந்தபின் மீண்டும் உறங்கவேண்டும் என்று தோன்றுகிறதா? கண் எரிச்சல் தலைவலியாக உள்ளதா ,படுக்கையிலிருந்து எழுந்திருக்கச் சோம்பேறித்தனமாக உள்ளதா ,வேலையில் கவனமின்மையாக இருக்கின்றீர்களா ,அனைவரிடமும் பேசிப்பழகுவது எரிச்சலாக உள்ளதா? பசியாகவோ/பசியின்மையாகவோ இருக்கின்றதா?இரவில் அதிக நேரம் நடக்கும் பழக்கம் இருக்கின்றதா, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?மேற்கண்ட கேள்விகளில் 7/3 என்றாலே நீங்கள் சரியாகவில்லை என்று அர்த்தமாகிறது. ஒரு நாள் இருநாள் என்றால் சரி, நீண்டகாலமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது இன்றைய சுழலில் அதிக நேரம் கண் விழித்து உழைப்பதால் நம் உடலில் பலவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறது.இதற்கான தீர்வுகளைப் பார்ப்போம்
நம்முடைய உடலில் biological clock (உயிரியல் கடிகாரம்) இயங்கிக்கொண்டே இருக்கும். அதை உணர்ந்து நாம் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி/குறிப்பிட்ட நேரத்தில் எழுவதைப் பழக்கமாக வைத்தூக்கொள்ளவேண்டும். நாம் தூங்கும்போது மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.இது தூங்குவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் அதிக நேரம் கண் விழித்து இருப்பதால்/ அதிகவெளிச்சத்தில் இருப்பதால் இந்த மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இது நாளடைவில் மனநோயாக மாறும் வாய்ப்புள்ளது இது உறங்கும்போது மட்டுமே சுரக்கும். உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் தொலைக்காட்சி/செல்பேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவும்,உங்களைச் சுற்றியுள்ள சூழல் எப்போதும் படபடப்பாக இயங்குவதை குறைத்துக்கொள்ளவும் ,இரவு படுக்க இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடித்துவிடவும், பிறகு படுக்கும் முன் சிறுநீர் கழித்துவிடவும். அப்போது சிறுநீர் கழிக்க நள்ளிரவில்/பின்னிரவில் எழாமல் இருக்க முடியும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிடவும் ,மது அருந்துவதைத் தவிர்க்கவும் முக்கியமாக அதிக கார உணவுகளை டீ, காபி போன்ற ஊக்க வஷ்துக்களை தவிர்க்கவும்
நீங்கள் தூங்கும் அறை நன்கு இருளாகவும் நன்கு படுக்கை வசதி கொண்டதாகவும், சத்தம் இல்லாமலும், கொசுக்கள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளவும்.ஜாதிக்காய் பவுடர் பாலில் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். ஆரம்பத்தில் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தலாம் ,மன அழுத்தத்தினை தவிர்க்கவும், குறைக்கவும், படுக்கையில் சவாசனம் என்ற யோகா மிக அவசியம்.
உடல் தளர்த்தலுக்கான யோகாவை மேற்கொள்ளவும், தூங்கும்முன் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பது நல்லது. அப்போது இறைவனின் திருநாமத்தையோ, மந்திரங்களையோ ஜெபிக்கலாம். மெல்லிசை பாட்டுக்கள் கேட்கலாம்

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *