முருகப்பெருமானை இந்த நாட்களில் வணங்கினால் அவர் அருளை பெறுவார்களாம்.!! – Tamil VBC

முருகப்பெருமானை இந்த நாட்களில் வணங்கினால் அவர் அருளை பெறுவார்களாம்.!!

முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி,விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார். அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, கந்தன் முதலியவை ஆகும். முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். கந்தனுக்குரிய விரதங்கள்- 1.வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம். முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *