ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்.!! – Tamil VBC

ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்.!!

தைராய்டு சுரப்பி என்பது கழுத்துப் பகுதியில் காணப்படும் ஓர் உறுப்பு. இது இதயத் துடிப்பு மற்றும் உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்காவிட்டால், உடலின் இயற்கை செயல்பாட்டில் பிரச்னைகள் உருவாகும்.ஹைபர் தைராய்டிசம் பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடியது. இதில் தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கும். ஆனால் ஹைப்போ தைராய்டு என்பது உடலில் தைராய்டு சுரப்பியின் உற்பத்தி வழக்கத்தைவிட குறைந்துவிடுவதாகும். இந்த ஹார்மோன் உற்பத்தியின் அளவு குறையக் குறைய உடலில் அறிகுறிகளும் அதிகரிக்கும்.மயக்கம், மன அழுத்தம்,செரிமானக் கோளாறு, சளி ,வறண்ட சருமம், உடல் எடை அதிகரிப்பு, தசை வலிமை இழப்பு, இதயத்துடிப்பு குறைதல், முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது மருத்துவரை கண்டிப்பாக அணுகவேண்டும். மேலும் உணவுமுறையில் கண்டிப்பாக கட்டுப்பாடுகள் அவசியம்.சோயா சோயாபீன்ஸ் மற்றும் சோயா சார்ந்த உணவுகளில் ஹார்மோன் செயல்பாட்டை தடுக்கும் பைட்டோஈஸ்ட்ரோஜென்கள் அதிகமுள்ளன.

அயோடின் அதிகமுள்ள உணவு சிலவகை ஹைபோதைராய்டுகளில் அயோடின் அளவு குறைவாக இருக்கும். அப்போது அயோடின் எடுத்துக்கொள்ளலாம். அதுவே அதிக அளவு எடுத்துக்கொண்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இரும்புச்சத்து மற்றும் கல்சியம் மாத்திரைகள் தைராய்டுக்கு மாத்திரை எடுப்பவர்கள் இரும்புச்சத்து மற்றும் கல்சியம் அதிகமுள்ள உணவுகளையும் ,மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. ஆனால் தைராய்டு மருந்துகளை எடுத்தவுடன் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் தைராய்டு மாத்திரையின் செயல்பாடு குறைந்துவிடும்.
ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், சிலவகைக் கீரைகள், முளைக்கட்டிய பயிறுகள் போன்றவை தைராய்டு சுரப்பியின் உற்பத்தியை குறைத்துவிடும்.இதுதவிர, காபி,புகையிலை மற்றும் ஆல்கஹால் போன்றவற்றையும் தவிர்த்துவிட வேண்டும்.ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடலின் செயல்பாட்டுக்கும் தைராய்டு ஹார்மோனின் செயல்பாட்டுக்கும் பெரிதும் உதவும்.
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் இதுபோன்ற ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகமுள்ள உணவுகள் தைராய்டு சுரப்பை அதிகரிக்கும். வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம் இதுதவிர, கடல் உணவுகள், பால் உணவுகள், முட்டை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
செலினியம் என்ற கனிமம் தைராய்டு சுரப்பின் அளவை சரிசெய்யக்கூடியது. சூரியகாந்தி விதை, உலர் கொட்டைகள், மீன், கோழி இறைச்சி, சிவப்பு அரிசி, பீன்ஸ்,காளான் பூண்டு ஆகியவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.டைரோசின் இது ஒரு அமினோ அமிலம். இது டி3 மற்றும் டி4 என்ற தைராய்டு சுரப்பை சரிசெய்கிறது. இறைச்சி வகைகள், சீஸ் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *