சிக்கன் மட்டனை விட அதிக சத்து நிறைந்த உணவுகள்..!! ஒரு கோப்பை சாப்பிட்டாலே போதுமாம்…!! – Tamil VBC

சிக்கன் மட்டனை விட அதிக சத்து நிறைந்த உணவுகள்..!! ஒரு கோப்பை சாப்பிட்டாலே போதுமாம்…!!

சாப்பாடு என்றால், மற்ற வேலைகளை கூட கண்டு கொள்ளாத அளவிற்கு சாப்பாட்டின் மீது அதீத காதல் பலருக்கும் உள்ளது.சைவ உணவுகளை விட அசைவ உணவுகளின் மீது தான் பலருக்கும் விருப்பம் அதிகம். சிக்கன், மட்டன் போன்றவற்றை பார்த்து விட்டால் ஒரு கட்டு கட்டிவிடுவர்கள்.இது போன்ற அசைவ உணவுகளை விடவும் சைவ உணவுகளில் அதிக ஆரோக்கியம் உள்ளது என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன.

பாதாம்:புரதசத்து அதிகம் நிறைந்த உணவுகளில் பாதமும் ஒன்று. 1 கப் பாதாமில் 12 கிராம் நார்ச்சத்தும், 264 மி.கி கால்சியமும், 3.7 மி.கி இரும்புச்சத்தும் உள்ளது. சிக்கன், மட்டனை விடவும் இதில் சத்துக்கள் நிறைந்துள்ளது.

சோயா பீன்ஸ்:1 கப் சிக்கனில் 43.43 கிராம் அளவு புரதசத்து உள்ளது. ஆனால், 1 கப் சோயா பீன்ஸில் 68 கிராம் அளவு புரதம் உள்ளது.சிக்கனை விடவும் இதில் தான் புரதசத்து அதிகமாக உள்ளது.

 

ஆளி விதைகள்:1 கப் ஆளி விதையில் 9.6 மி.கி அளவு இரும்புசத்து உள்ளது. இவை மட்டனில் உள்ள இரும்புச்சத்தை விடவும் அதிகமானது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டனை விடவும் இது உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கசகசா:கசகசாவில் சுமார் 19.5 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மட்டனில் உள்ள சத்தின் அளவிற்கு ஈடானது. மேலும், இது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் செய்கிறது.

குறிப்பு:அசைவ உணவில் இருக்க கூடிய சத்துக்கள் தான் இந்த வகை உணவுகளிலும் உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த உணவு வகை பெரும்பாலும் உதவும். ஒரு கப் சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *