ஊர் திரும்ப முடியாமல் மதுரையில் தவித்த மீனவர் குடும்பம்..!! சொந்தச் செலவில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டர் – Tamil VBC

ஊர் திரும்ப முடியாமல் மதுரையில் தவித்த மீனவர் குடும்பம்..!! சொந்தச் செலவில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டர்

சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த மீனவர் குடும்பத்திற்கு பண உதவி செய்து, காரில் அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டரை, அனைவரும் பாராட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சேர்ந்தவர் செல்வம், 39. மீனவரான இவர், கடந்த வாரம் வாகனம் மோதி, தலையில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு மனைவி பிரியா, 35, உறவினர் மாற்றுத்திறனாளி மணிகண்டன், 45, ஆகியோருடன் மேல் சிகிச்சைக்கு வந்தார்.

தொடர் சிகிச்சையால் குணமடைந்த செல்வம், நான்கு நாட்களுக்கு முன், ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.கையில் பணமில்லாமலும், ஊருக்கு செல்ல வழியின்றியும் தவித்த மூவரும், யானைக்கல் தரைப்பாலத்தில் தங்கினர். இதை கவனித்த, விளக்குத்துாண் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, நேற்று காலை விசாரித்த போது, நடந்த விபரங்களை பிரியா கூறினார்.உடனடியாக தன்னிடமிருந்த, 3,300 ரூபாயை கொடுத்த லோகேஸ்வரி, வாடகை கார் ஒன்றை வரவழைத்து, மூவரையும் ஊருக்கு அனுப்பி வைத்தார்.லோகேஸ்வரி கூறுகையில், ‘ஊரடங்கில் போக்குவரத்து வசதியின்றி தவித்த அவர்கள், கிடைத்த உணவை உண்டு நாட்களை நகர்த்தி வந்தனர்.செல்வத்திற்கு தலையில் அடிபட்டதால், ஒருவர் துணையின்றி நடக்க முடியாது. அவரது உறவினரும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. ‘இதையெல்லாம் கருதி, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன், ‘ என்றார்.இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரியின் மனப்பூர்வமான சேவையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *