ஆண்களின் எந்தப் பகுதிகளை பெண்கள் இரகசியமாக ரசிப்பார்கள்..? ஆய்வுகளில் வெளியான முடிவு.! – Tamil VBC

ஆண்களின் எந்தப் பகுதிகளை பெண்கள் இரகசியமாக ரசிப்பார்கள்..? ஆய்வுகளில் வெளியான முடிவு.!

என்னங்க இந்த மாதிரி எல்லாம் கேட்கறீங்களேன்னு யோசிக்க வேண்டாங்க. பொதுவா பலரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சின்ன சந்தேகம் தான் இது. வெளிப்படையாக கேட்க தயக்கப்பட்டு, மனதுக்குள் வைத்து குமுறிக்கொண்டிருக்கின்றனர்.

இது மாதிரி கேட்கத்தயங்கும் சிலவற்றை, விரிவாக அலசுவதே நம்முடைய வேலைங்க. எப்படி ஒரு பெண்ணை பார்த்தால், கூந்தல், முன்னழகு மற்றும் பின்னழகு இவற்றை ஆண்கள் ரசிக்கின்றனரோ, அதுபோல பெண்கள் சைட் அடிக்கவும் சில வரைமுறை இருக்காம்.

பலான படத்தை பார்த்து பார்த்து கெட்டுப்போன சில ஆண்கள், வயிற்றில் சிக்ஸ் பேக் இருந்தால் தான் கவர்ச்சி என்பது போலவும், சட்டையை கழற்றி கட்டினால் தான் கவர்ச்சி என்பது போலவும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி செய்தால், அசுசையாக இருக்குமே தவிர, அது பெண்களை ஈர்க்காது. பெண்களின் உடல் அழகு ஆண்களை ஈர்க்கிறது என்றால், ஆண்களின் உடல் அழகோடு சேர்த்து, அவர்களுடைய பழக்க வழக்கமும் பெண்களை கவரச்செய்யும்.

உதாரணத்துக்கு நோஞ்சான் மாதிரி உடலமைப்பு கொண்ட ஆண், அழகான பெண்ணை காதலிப்பதை பார்த்திருப்போம். என்னுடைய நண்பன் கருப்பாக இருந்தாலும், அவனுடைய காதலி கண்ணுக்கு பேரழகன் போல தெரிகிறாள். இந்த இடத்தில் ஆணின் அழகோ, உடல் அமைப்போ பெண்களை கவரவில்லை. அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான் பெண்களை ஈர்க்க வைக்கிறது. நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் இப்படி என்று வகைப்படுத்திக்கொள்ளலாம்.

மீதி எல்லாமே, சினிமாத்தனமான செயல்களால் ஈர்க்கப்படுகின்றனர். நல்ல வாட்ட சாட்டமான ஆண் கருப்பு பனியன் அணிந்து கொண்டு புல்லட்டில் சென்றால், பெண்கள் கூட்டம் திரும்பி பார்ப்பார்கள். வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை அணிந்து, ஸ்டைலான ஷூ அணிந்து கொண்டு, வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சென்றால், அதுவும் பெண்களை ஈர்க்கும். பனியன் அணிந்த, கம்பீரமான தோள்பட்டையை, சில பெண்கள் மறைமுகமாக ரசிப்பார்களாம்.சட்டை பட்டனை கழுத்து வரைக்கும் போடாமல், மேல் இரண்டு பட்டனை கழட்டிவிட்டு, நெஞ்சு முடி லேசாக தெரியும் படி இருப்பது, ஒரு ஆணை இரசிக்கும் பெண்ணுக்கு ரொம்ப பிடிக்கும். இதெல்லாம் தாண்டி, தன்னை சார்ந்த பெண்ணுக்கு ஏதாவது ஒன்று என்றால், ஆண்மை தன்மையுடன் துணிந்து நின்று போராடும் ஆண், உருவ அமைப்பில் எப்படி இருந்தாலும், அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அவன் மீது காதல் வயப்படுவார்களாம். இது வரை சொன்னதெல்லாம் பலருடைய அனுபவ தொகுப்பாகும். முயற்சி செய்வதும், பயிற்சி செய்வதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஏடா கூடாக ஏதாவது செய்து, வம்பில் மாட்டினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *