காம இச்சையைத் தூண்டவல்ல விலைமாதுக்கள் பயன்படுத்திய திருமணமான உங்களுக்கே தெரியாத அற்புதமான பொருள்..!! – Tamil VBC

காம இச்சையைத் தூண்டவல்ல விலைமாதுக்கள் பயன்படுத்திய திருமணமான உங்களுக்கே தெரியாத அற்புதமான பொருள்..!!

காம இச்சையை தூண்ட விலைமாதுக்கள் குங்குமத்தில் பயன்படுத்திய ஒரு பொருள். முதலிரவின் போது கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்.என்னவென்று யூகித்து விட்டீர்களா? தற்காலத்தில் மிகவும் அரிதான பொருளான ஜவ்வாது தான்.

அரிதான பொருளா? கடைகளில் எளிதாக கிடைக்குதே? அதெல்லாம் ஜவ்வாது இல்லையா என்றால் இல்லை என்பதே உண்மை.காட்டு பூனையான ஜவ்வாது பூனையிலிருந்து பெறப்படுவது ஜவ்வாது.
இதே போல புனுகு பூனை என்று ஒன்றுள்ளது. அதிலிருந்து பெறப்படுவது புனுகு. இவ்வகை பூனைகள் பார்க்கத்தான் பயங்கரமாக இருக்கும் ஆனால் பயந்த சுபாவம் கொண்டவை. ஆண் பூனையின் இனவிருத்தி உறுப்பின் அருகே இணை கவர்ச்சிக்காக சுரக்கப்படும் ஒருவகை மெழுகு தான் ஜவ்வாது.குறிப்பிட்ட காலத்தில் இந்த பூனையை மரச்சட்டத்தில் மாட்டி கத்தியை கொண்டு சவரம் செய்வது போல மெதுவாக அந்த மெழுகை வழித்தெடுப்பார்கள்.

மிருக வதை சட்டம் மெழுகு எடுக்க விடாது என்பதால் இது தற்போது சாத்தியம் இல்லை. அந்த மெழுகை சந்தனத்தோடு கலந்து விற்பனை செய்வார்கள். அதுதான் உண்மையான ஜவ்வாது.ஆனால் கடைகளில் விற்கப்படும் ஜவ்வாது, முழுக்க முழுக்க செயற்கையே. சந்தன மரம் போல நறுமணம் உள்ள ஒருவகை மரத்திலிருந்து பெறப்படுகிறது.

இன்றைய கடைக்காரர்கள் ஜவ்வாது இருந்த பாட்டிலை கூட பார்த்திருக்க மாட்டார்கள். உண்மையான ஜவ்வாது தங்கத்தை விட கூடுதலானது. மிகவும் அரிதான பொருள்.இந்த வகை பூனைகள் இந்தியா மற்றும் அரபு நாடுகளில் மட்டுமே உள்ளது.
இந்த மணம் காம இச்சையை தூண்டும் என்பதால் அக்காலத்தில் விலை மாதுக்கள், ஜவ்வாது கொண்டு பொட்டு வைத்து வந்ததாகவும் அதுமட்டும் இன்றி முதல் இரவுகளில் காம உணர்வை தூண்டவும் இவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *