அசைவ உணவை இந்த நாட்களில் சாப்பிட்டால் தீராத கொடிய வறுமை ஏற்படுமாம்..!! – Tamil VBC

அசைவ உணவை இந்த நாட்களில் சாப்பிட்டால் தீராத கொடிய வறுமை ஏற்படுமாம்..!!

பண்டைய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும்.

நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும்.இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

மனதில் கொள்ள வேண்டிய திகதிகள்:இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.

தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்:தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.

விலகி இருக்க வேண்டிய நபர்கள்:சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.

சூரிய அஸ்தமனம்:சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டுவதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.வாக்குறுதி அளித்த நாளில் தானம் செய்யவும்:ஒரு குறிப்பிட்ட நாளில் தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.வெண்கல பாத்திரம்:வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *