குப்பை பொறுக்கி திரிந்தவருக்கு அடித்த அதிஷ்டம் ! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய அதிஷ்டம் – Tamil VBC

குப்பை பொறுக்கி திரிந்தவருக்கு அடித்த அதிஷ்டம் ! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய அதிஷ்டம்

கடற்கரையில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தவருக்கு கிடைத்த வாந்தியால் கோடீஸ்வரராகப் போகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சோம்சாக் பூன்ரித். இவருக்கு 45 வயதாகிறது. ஆரம்பத்தில் இவர் மீனவராக இருந்தார். ஆனால் புயலினால் இவரது படகு கடும் சேதம் அடைந்தது.இதனால் வாழ்வாதாரம் இழந்தவர், கடற்கரையில் குப்பைகளை சேகரிக்கத் துவங்கினார்.அப்படி அவர் ஞாயிற்றுக்கிழமை சேகரித்தபோது கடற்கரையில் மஞ்சள் நிறத்தில் மெழுகுபோல் ஏதோ கிடைத்தது.அதைப் பார்த்ததும் அதை சந்தோசமாக எடுத்துக்கொண்டவர் அதை திமிங்கலத்தின் வாந்தி என கொண்டாடத் துவங்கினார்.

இது என்ன புதிதாக இருக்கிறது என பார்க்கிறீர்களா? நடுக்கடலில் இருக்கும் திமிங்கலங்கள் சிலநேரம் அரிதான மீன்களை சாப்பிடுமாம். அவை செமிக்காமல் திமிங்கலத்தின் குடலிலேயே தங்கிவிடும்.
கொஞ்சநாளில் அது ஒரு பெரிய பந்து மாதிரி உருவாகிவிடும். இதை வெகுநாள்களுக்கு பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியில் தள்ளுமாம். இந்த வாந்தி மெழுகு பந்து மாதிரி இருக்கும். இதை விஞ்ஞானிகள் ambergris என்கிறார்கள்.

இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படுமாம். இதன் விலையும் இதனால் உச்சத்தில் இருக்கும். இவர் மீனவர் என்பதால் இதுபற்றி அவருக்கு தெரிந்து இருந்ததாம். இதன் மதிப்பு 80 ஆயிரம் பவுண்ட் ஆம்…அதாவது இந்தியப் பணத்தில் 1,85,29,783 ரூபாய்!

கடந்த 2016ல் 1.5 கிலோ எடைகொண்ட திமிங்கல வாந்தி 50 ஆயிரம் பவுண்ட்க்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *