மங்கலான பார்வையை போக்கி தெளிவான பார்வையை பெற உணவிற்கு முன் இத கலந்து குடியுங்க! – Tamil VBC

மங்கலான பார்வையை போக்கி தெளிவான பார்வையை பெற உணவிற்கு முன் இத கலந்து குடியுங்க!

இது பல்வேறு ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக் போன்றவற்றில் மட்டுமின்றி, பல்வேறு எடை குறைப்பு மருந்துகள், கொலஸ்ட்ரால் மருந்துகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.கற்றாழை ஜூஸ் உடன் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு காலையில் உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

பலருக்கு கண் வறட்சி, மங்கலான பார்வை, கண் அழற்சி போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு மாசுபாடு மட்டுமின்றி, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்வதும் காரணங்களாகும். கற்றாழையில் கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ ஏராளமான அளவில் உள்ளது. இந்த வைட்டமின் கண்களில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளித்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கண் பிரச்சனைகள் வராமல் இருக்க, காலை உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடியுங்கள்.

கற்றாழை ஜூஸ் தயாரிக்கும் முறை:மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும். இந்த அற்புத பானத்தை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மருத்துவ சர்வேக்களில், உலகில் ஏராளமானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 52% அதிகமாக மலச்சிக்கலால் கஷ்டப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிக காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான். ஆனால் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதன் மூலும், உடலின் ஆற்றலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நன்கு உணர முடியும். அதாவது இதுவரை உங்களது உடலில் இருந்த ஆற்றலை விட, இந்த ஜூஸைக் குடித்த பின் ஆற்றல் நன்கு அதிகரித்திருப்பதைக் காணலாம். இதற்கு கற்றாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் ஆற்றலை நாள் முழுவதும் சீராக வைத்திருக்கும்.

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அத்தகைய கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்துவதோடு, அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, அழகும் அதிகரித்துக் காணப்படும். அதிலும் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்

பலர் உடல் பருமனால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். மூட்டு வலி முதல் இதய நோய் வரை பல பிரச்சனைகளுக்கு வேராக இருப்பது உடல் பருமன் தான். எனவே ஒருவர் தங்களது உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இயற்கையாகவே உடல் எடை குறையும்.

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்துடன் இருப்பது மிகவும் அவசியம். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், அது உடலைத் தாக்கும் நோய்களின் திறன் குறைந்து, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படக்கூடும். ஆனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள சாப்போனின்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த நினைத்தால், கற்றாழை ஜூஸை காலை உணவிற்கு முன் குடியுங்கள்.

செல் சீரழிவைக் குறைக்கும்:வயது அதிகரிக்கும் போது, உடலில் உள்ள செல்கள் மெதுவாக சீரழிய ஆரம்பிக்கும். இது ஓர் இயற்கையான செயல். இருப்பினும் சிலருக்கு இச்செயல் வேகமாக நடைபெறும். இதன் அறிகுறியாக இளமையிலேயே முதுமையான தோற்றம், உடல் பலவீனம், ஞாபக மறதி போன்றவற்றை சந்திக்கக்கூடும். ஆனால் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடித்தால், இந்த கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள், செல்கள் சீரழிவது தடுக்கப்பட்டு, உடற்செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

கற்றாழை ஜூஸில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலினுள் காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, விரைவில் குணமாகவும் செய்யும். ஏனெனில் கற்றாழையில் உள்ள ஆக்ஸின் மற்றும் ஜிப்ரல்லின்கள் என்னும் ஹார்மோன்கள் உள்ளன. இவை உட்காயங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்களை விரைவில் வளரச் செய்யும். ஆகவே இந்த ஜூஸை அடிக்கடி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நுண்ணுயிர் நோய்களான வைரஸ் காய்ச்சல், பாக்டீரியல் தொற்றுக்கள் போன்றவை எளிதில் ஒருவரை தாக்குவதற்கு, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது தான் காரணம். ஆனால் ஒருவர் தனது அன்றாட டயட்டில் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், உடலினுள் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்துப் போராடி, தீங்கு விளைவிக்கும் நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *