ஆத்தாடி!! இந்த விஷயம் இத்தனை நாளா தெரியாம போய்டுச்சே பாஸ்…! – Tamil VBC

ஆத்தாடி!! இந்த விஷயம் இத்தனை நாளா தெரியாம போய்டுச்சே பாஸ்…!

நீங்க உங்க காதலுக்கு முத்தம் கொடுப்பதால் என்னலாம் பாதிப்பு வரும்னு உணக்ளுக்கு தெரியமா…? மக்களே….!முத்தம் என்பது அழகிய உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. முத்தம் குடுக்காதவரோ, அதனை விரும்பாதவரோ எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை அனைவரும் முத்தம் கொடுத்துக்கொண்டும், பெற்றுக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அன்பின் அடையாளமான முத்தத்தில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது.

சிறிய வகை நோய்களில் இருந்து ஆபத்தான பாலியல் நோய் வரை முத்தத்தின் மூலம் பரவுகிறது. பொதுவாகவே பாலியல் நோய் என்றால் அவை உடலுறவு மூலம்தான் பரவும் என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் முத்தத்தின் மூலமும் சில பாலியல் நோய்கள் பரவக்கூடும். இந்த பதிவில் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

ஹெர்பெஸ் என்ற நோய் பெரும்பாலும் முத்தத்தின் மூலம்தான் பரவும். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 என்னும் இந்த வைரஸ் உங்கள் வாய்ப்பகுதியில் குணப்படுத்த இயலாத புண்களை உண்டாக்கக்கூடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் நேரடியாக வை வழி முத்தத்தில் ஈடுபடும்போது இந்த நோய் உங்களுக்கும் பரவக்கூடும்.

சளி, காய்ச்சல், குடல் தொடர்பான நோய்கள் போன்றவை முத்தங்கள் மூலம் பரவலாம் என பிரபல நாளிதழ் கூறியுள்ளது. இவை சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளாலோ அல்லது சுற்றத்தார் இருமுவதாலோ, தும்முவதாலோ கூட பரவலாம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர் இன்னொருவரை முத்தமிடும்போது இந்த நோய்கள் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.முத்தத்தால் மோனோநியூக்ளியோசிஸ் அல்லது மோனோ என்னும் இந்த நோய் எப்ஸ்டீன்- பார் என்னும் வைரசால் ஏற்படுகிறது. முத்தத்தின் மூலம் பரவும் இந்த நோய் அளவுக்கதிகமான சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

MRSA என்னும் இந்த நோய் நீங்கள் ஜிம்மில் இருக்கும்போதோ அல்லது மருத்துவமனையில் இருக்கும்போதோ அங்கிருக்கும் கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். ஆனால் இது முத்தங்கள் மூலம் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் இந்த நோய்கள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.மேலும், ஹெபாடிட்டீஸ் பி முத்தங்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. பொதுவாக இந்த நோய் உடலுறவு மூலம் மட்டுமே பரவுவதாக அறியப்பட்டாலும் இது முத்தத்தின் போது ஏற்படும் எச்சிலாலும் பரவிய சில நோயாளிகள் உள்ளனர். எனவே ஜாக்கிரதையாக இருக்க வண்டியது நம் கடமை.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *