காரின் பின்பக்க கண்ணாடி முழுவதும் மெல்லிய கோடுகள் இருப்பது எதற்காக? காரணம் தெரிந்தால் கை வைக்க மாட்டீர்கள்! – Tamil VBC

காரின் பின்பக்க கண்ணாடி முழுவதும் மெல்லிய கோடுகள் இருப்பது எதற்காக? காரணம் தெரிந்தால் கை வைக்க மாட்டீர்கள்!

போன வாரம் நானும் தம்பியும் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு போயிருந்தோம். கடை இருக்கும் பகுதி கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாழும் ஏரியா என்பதால், தெரு முழுக்க வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். வீட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி முடித்த பின்னர், திரும்பி வரும் போது, ஒவ்வொரு காரின் பெயரையும் சரியாக சொல்ல வேண்டும் என்று பிளான் போட்டோம். பேசிக்கொண்டே இருக்கையில், தம்பி ஒரு காரை காண்பித்து, அந்த காரின் பின் பக்க கண்ணாடியில் எவ்வளவு கோடு இருக்கு பாரு என்றான்.

“உன்ன மாதிரி யாராவது கை, கால் வச்சுக்கிட்டு கம்முன்னு இருக்காமா கீறல் போட்டு விட்ருப்பாங்க” என்றேன். என்னை மேலும் கீழும் பார்த்தான். அவன் வேறு, ஆட்டோமொபைல் இஞ்சினீரிங் படிக்கிறான் என்பதால், வேறு காரணம் தெரிந்திருக்கும் போல, பிறகு எனக்கு சொல்ல ஆரம்பித்தான். காரின் பின்பக்க கண்ணாடியில் இருப்பது வெறும் கோடு மட்டும் அல்ல. அவை windshield glass பதிக்கப்பட்ட மெல்லிய மின்சார கம்பிகளாம். அங்க ஏன் தேவையில்லாம வைக்கணும்? என்ற சந்தேகம் வரலாம்.

அதற்கு காரணம் இருக்கு. குளிர் காலங்களிலோ அல்லது வேறு சில காரணத்தினாலோ கண்ணாடி மீது நீர் திவலைகள் படியும். உதாரணத்துக்கு கொதிக்க வைத்த நீருக்கு மேல், மூடி போட்டு மூடினால் எப்படி தட்டின் மீது நீர்த்திவலைகள் படியுமோ, அது போல காருக்குள் இருக்கும் ஈரப்பதம் ஆவியாகி, அவை நீர்த்திவலைகளாக கண்ணாடி மீது படியும். முன்பக்க கண்ணாடி என்றால் வைப்பர் போட்டு துடைத்து விடலாம். பின் பக்க கண்ணாடி என்றால், எல்லா கார்களிலும் பின்னால் வைப்பர் இருக்கும் என்று சொல்ல முடியாது.

அதனால் சிறு கோடுகள் போல இருக்கும் மெல்லிய மின் கம்பிகளை பதித்துள்ளனர். அவை நீர் திவலை அல்லது பனிப்படலத்தை மின்சக்தி மூலம் வெப்பத்தை ஏற்ப்படுத்தி நீக்கிவிடும். இதற்கு முன்னர் சுடுகாற்றை பயன்படுத்தும் முறை எல்லாம் கூட இருந்தது. இப்போ சிம்பிளா வேலை முடிந்தது. ஒரு சில ஹையர் ரக கார்களில் முன் பக்கத்திலும் இது போன்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டாலும், அவை கண்ணுக்கு தெரியாதவாறு பதிக்கப்படுகின்றன. இன்னும் எத்தனையோ இதுபோல இருக்கு.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *