சமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடி..கடித்த பசுமாடு பரிதாபமாக உயிரிழப்பு..! – Tamil VBC

சமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடி..கடித்த பசுமாடு பரிதாபமாக உயிரிழப்பு..!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மேய்ச்சலின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை கடித்ததில் பசுமாடு உயிரிழந்தது.

தமிழகம் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி, திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. மானாவாரி விவசாயியான இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் கால்நடைகளை மேய்த்து வந்த இவர். திகினாரை குட்டையில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது குட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாட மறைத்து வைத்திருந்த அவுட் காய் எனப்படும் நாட்டுவெடியை கடித்ததில் மாடு படுகாயம் அடைந்தது.

இதில் அதன் வாய்ப்பகுதி சிதைந்ததால் அதனால் தீவனம் சாப்பிட முடியாமல் சில மணி நேரத்தில் உயிரிழந்தது. இச் சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை உலுக்கியது. மேலும் திகினார் சிறுவர்கள் விளையாடும் இடம் என்பதால் அங்கு மறைத்து வைக்கப்படும் நாட்டு வெடியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டு வெடியை வைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *