தமிழ்நாட்டில் மட்டுமே நிலவும் மர்ம நிகழ்வுகள்! ஆச்சரியம் மட்டுமே பட முடியும், அறிவியலால் விளக்க முடியாது!! – Tamil VBC

தமிழ்நாட்டில் மட்டுமே நிலவும் மர்ம நிகழ்வுகள்! ஆச்சரியம் மட்டுமே பட முடியும், அறிவியலால் விளக்க முடியாது!!

தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள சில மர்ம நிகழ்வுகள், இது ஏன் இப்படி நடக்கிறது என அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும். அப்படி உள்ள சிலவை, இந்த கல் வெகு பிரபலம். கிருஷ்ணரது வெண்ணெய் உருண்டை என்பார்கள். மகாபலிபுரத்தில் உள்ளது. 1908 இல் இந்த கல்லை அப்போதைய சென்னை கவர்னர் ஏழு யானைகளை கொண்டு நகர்த்த முயன்றும் முடியவில்லை. ஒரு அங்குலம் கூட நகராத அந்தக்கல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

இவர் நாகப்பட்டினத்தில் உள்ள சிங்காரவேலன். அக்டோபர் மாதத்தில் சிங்காரவேலன் சூரபத்மனை அழித்த திருவிழா கொண்டாடபடுகிறது. போரின் ஐந்தாம் நாளன்று இவர் தன் தாயிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவார். விழாவின் அந்த நாளன்று சிங்காரவேலனின் முகத்தில் இருந்து வியர்வை துளிகள் வந்து கொண்டிருக்கும். அதனை பக்தர்கள் மீது தெளிப்பார்கள். ஆறாம் நாள் இந்த வியர்வை வருவது குறையும். இது இப்படி சாத்தியம் என்பது இன்னும் விளங்காத மர்மம்.

இவர் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவில் கல்கருடன். கேள்விப்பட்டிருப்போம். மார்கழி, பங்குனி மாதத்தில் கல்கருடனை வெளியே எடுத்து வருவார்கள். ஆரம்பத்தில் நான்கு பேர் மட்டுமே சிலையை தூக்கிவருவார்கள். போக போக சிலையின் நிறை அதிகரித்து கொண்டே போகும். வெளியே கொண்டு வந்த சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து போகும் போது 64 பேர் தூக்கி செல்வார்கள். கோவிலை விட்டு வெளியேறும் போது எடை கூடுவதும் கோவிலை நெருங்கும் போது எடை குறைவதும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

இப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கோவில்களில் சுயம்பாக உருவாகிய சிலைகள் பிரம்மிக்க வைக்கும் ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஆங்கிலேய தளபதி மாலிக்கபூர் கலாச்சார சிலைகளை சேதப்படுத்தி கொண்டிருந்த போது மதுரை மீனாட்சி சிலையையும் சேதப்படுத்த முயன்று கொண்டிருந்தார். வேதியர்கள் சிலர் மீனாட்சி அம்மனது சிலையை கற்திரை கொண்டு மூடியுள்ளனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கற்திரையை அகற்றிய போது, மீனாட்சிக்கு ஏற்றிவைத்த விளக்கும் சூடிய மலர்களும் வாசனை மாறாமல் இருந்துள்ளது. இந்த அற்புதத்தை காண மதுரை மக்களே கூடியிருந்தனர். அறிவியலை தாண்டிய ஆன்மிகம் எப்போதுமே விளங்க முடியாத மர்மமாகவே வியப்பில் ஆழ்த்துகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *