இந்தக்கேள்வியெல்லாம் கேட்டால் ஒரு பெண் உங்களை ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டாள்! பெண்களிடம் கேட்கக் கூடாத 10 கேள்விகள்! – Tamil VBC

இந்தக்கேள்வியெல்லாம் கேட்டால் ஒரு பெண் உங்களை ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டாள்! பெண்களிடம் கேட்கக் கூடாத 10 கேள்விகள்!

“அதெப்படி என்ன பார்த்து நீ அந்த கேள்வி கேட்கலாம்” என்று கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி, செந்தில் காமெடி மாதிரி, ஒரு சில கேள்விகளை பெண்களிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரும் ஒரு மூடில் இருக்கும் போது, அவர்கள் இருக்கும் நிலை தெரியாமல் வாய் விட்டால், வம்பில் சென்று மாட்டிக்கொள்ள வேண்டியது தான். அப்படி பெண்களிடம் கேட்கக்கூடாத ஒரு சில கேள்விகள் குறித்த தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.

உங்களுக்கு நன்றாக சமைக்க வருமா? – அவங்க பக்கம் இருந்து “ஏன் நீ சமைச்சு தரப்போறியா?” என்ற பதில் வரும். உங்க வயசு என்ன? – அத இப்போ நீ தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறே? என்று வறுத்தெடுத்து விடுவார்கள்.அவர்களிடத்தில் அந்தரங்கம் சார்ந்த கேள்விகளை கேட்பதை தவிர்த்து கொள்ளவும்.

காதல் தோல்வியுற்றவர்களாக இருந்தால், முந்தைய காதல் பற்றி கேட்டு அவர்களை காயப்படுத்த வேண்டாம்.பெண்களை அடக்குமுறை செய்யும் விதமான கேள்விகளை கேட்க கூடாது.புதிதாக திருமணமான பெண்களிடம், விளையாட்டாகக்கூட அவர்களின் கன்னித் தன்மையை பரிசோதிக்கும் விதமான கேள்விகளை கேட்டு விடாதீர்கள்.

வேலைக்குப் போகும் பெண்களிடத்தில், அவர்கள் என்ன காரணத்திற்காக வேலைக்கு செல்கிறார்கள் என்று கேட்க வேண்டாம்.உங்கள் போன் நம்பர் என்ன? என்று எடுத்த எடுப்பில் கேட்டால், மகாகோவம் வந்துவிடும். திருமணமான பெண்ணிடத்தில், இன்னும் ஏதும் விசேஷம் இல்லையா என்று கேட்க வேண்டாம்.பெண்களிடத்தில் அவர்களின் தந்தையை இழிவாகக் கருதும் கேள்விகளை கேட்க வேண்டாம்.ஆக பெண்களிடம் பத்து கேள்விகள் அல்ல. முதலில் பெண்களிடம் கேள்வியே கேட்க கூடாது என்பதை சூது வாது தெரிந்த கணவன்மார்கள் உணர்ந்திருப்பார்கள்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *