3 நாள் கோமாவில் இருந்தியா சர்மா? வச்சு செய்யும் டிவிட்டர் வாசிகள்! – Tamil VBC

3 நாள் கோமாவில் இருந்தியா சர்மா? வச்சு செய்யும் டிவிட்டர் வாசிகள்!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து நீதி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், சாக்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு ( custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *