இந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம். அவர்தான் சாணக்கியர். சாணக்கிய தந்திரம் என்பது உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஏனெனில் சாணக்கியரின் தந்திரம் என்பது ஒருபோதும் பொய்த்ததில்லை என்பது வரலாற்றில் நிருபிக்கப்பட்ட ஒன்று
சாணக்கியர் அர்த்தசாஸ்த்திரத்தை மட்டும்தான் எழுதியுள்ளார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூலும் உள்ளது அதுதான் சாணக்ய நீதி. இந்த நூலில் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற என்னே செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சாணக்கியர் மிகவும் ஆழமாக கூறியிருப்பார். அந்த நூலில் இருக்கும் சில முக்கியமான சிந்தனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிந்தனை 1
எவர் ஒருவர் சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்து அதில் இருந்து அளவில்லா அறிவை பெருகிறாரோ அவர் வாழ்க்கையில் எந்த கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும், எதனை பின்பற்றக்கூடாது என்பதை நன்கு உணரவேண்டும். குறிப்பாக எது நல்லது எது கெட்டது என்பதை நிச்சயம் உணர வேண்டும்.
சிந்தனை 2
தான் கற்ற கல்வியிலிருந்து தான் வாழும் சமூகத்திற்கு நல்லது எது என்பதை புரிந்துகொண்டு அதனை மற்றவர்களுக்கு சரியான கண்ணோட்டத்தில் புரியவைத்து அதற்காக பேசவேண்டும்.
சிந்தனை 3
எவர் ஒருவர் வீட்டில் தாயும் இல்லாமல் மனைவியும் இனிமையாக பேசக்கூடியவராக இல்லாமல் போனால் அவன் வாழ்க்கை காட்டில் வாழ்வது போலாகும். அதற்கு அவன் வனத்திற்கு சென்றே வாழலாம்.
சிந்தனை 4
ஒருவர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை எதிர்காலத்தில் வரக்கூடிய கடினமான காலத்திற்காக பாதுகாக்க வேண்டும். தனது செல்வத்தை இழந்தாவது தன்னுடைய மனைவியை பாதுகாப்பவனே சிறந்த மனிதன். அதைவிட தன் மனைவியும், செல்வத்தையும் தியாகம் செய்யாமலேயே தன் ஆன்மாவை காத்துக்கொள்பவனே வாழ்க்கையில் வெற்றிபெறுவான்.
சிந்தனை 5
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவிற்காக உங்கள் செல்வத்தை பாதுகாத்து வையுங்கள். ” செல்வந்தனுக்கு பணத்தை பற்றிய அச்சம் எதற்கு? ” என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் செல்வந்தர்களே தங்களுக்குள் பனிப்போரில் ஈடுபடும்போது அவர்கள் செல்வம் அழியத்தொடங்கும்.
சிந்தனை 6
உங்களுக்கு மரியாதை இல்லாத ஒரு நாட்டில் குடியேறாதீர்கள். ஏனெனில் அங்கு உங்களால் உங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள இயலாது, நண்பர்களை பெற இயலாது, அறிவையும் ஒரெ முடியாது. இது நாட்டிற்கு மட்டுமல்ல வீட்டிற்கும் பொருந்தும்.
சிந்தனை 7
இந்த ஐந்து நபர்கள் இல்லாத இடத்தில் ஒரு நாள் கூட தங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் செல்வந்தன், வேதம் கற்ற பிராமணன், மன்னன், ஆறு மற்றும் ஒரு மருத்துவர். இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் அந்த இடத்தில் தங்கக்கூடாது
சிந்தனை 8
ஞானமுள்ள மனிதர்கள் ஒருபோதும் இந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள்.அதாவது தனக்கான வாழ்வாதாரத்தை உருவாக்க வாய்ப்பு இல்லாத இடம், யாரும் யாருக்காகவும் பயப்படாத இடம், அவமானம் என்னும் உணர்வு இல்லாத இடம், அறிவு இல்லாத இடம், தொண்டு மனப்பான்மை இல்லாத இடம். ஏனெனில் அவமானங்களும், பயமும், ஞானமும் இவைதான் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும்.