எண்ணம் போல் அமையும் வாழ்க்கை..அவசியம் படியுங்கள்..!! – Tamil VBC

எண்ணம் போல் அமையும் வாழ்க்கை..அவசியம் படியுங்கள்..!!

நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கைக்கு நாம் தான் காரணம். அது சந்தோசமான வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சோகமானதாக இருந்தாலும் சரி, அதாவது நாம் எண்ணிய எண்ணங்கள் தான் காரணம்.நாம் எமது எண்ணங்களை கவனிக்கத் தொடங்கினாலே நம் எண்ணங்களை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும். அதாவது ஒருவர் தனக்குப் பிடித்தமான வீடு, அல்லது உறவுகள், அல்லது பணம் அல்லது பதிவு ஏதுவேண்டும் என்றாலும், அவரது எண்ணத்தைக் கொண்டு ஈர்த்துக் கொள்ள முடியும். அது எப்படி என்று பார்ப்போமானால், ஒருவருக்கு ஒரு வீடு வேண்டும் என்றால் அந்த வீடு ஏற்கனவே அவருக்குக் கிடைத்துவிட்டதாக கற்பனை செய்ய வேண்டும். அந்த வீட்டில் அவர் வாழ்வது போல் அங்கே புதிதாக குடிபுகுவது போல் தினமும் கற்பனை செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது இவ் எண்ணங்களைப் பிரபஞ்சம் பெற்று அதை நடத்தி கொடுத்துவிடும். இக்கற்பனையில் முக்கியமானது இறுதி இலக்கான வீட்டை வாங்கி அதில் வாழ்வது எப்படி என்பதை மட்டும் கற்பனை செய்ய வேண்டும். அதை வாங்குவதற்கான பணம் மற்றும் வேறு சிரமங்களை சிந்திக்கக்கூடாது. இறுதியாக மகிழ்ச்சி அடையும் நிகழ்வை மட்டும் கற்பனை செய்ய வேண்டும்.வாழ்க்கையில் பெரிய வெற்றி கண்டவர்கள் கடுமையாக உழைக்கவில்லை தமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வெற்றியைக் குவித்தவர்களே யாவார். இப்பிரபஞ்சத்தின் எண்ணத்தைக் கொண்டு எவற்றையும் நம்மால் ஈர்க்க முடியும்.

நன்றி: ஹரிசன்

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *