மன நிலை சரியிலாத அம்மா திட்டினாரா? ஒரே அறையில் தூக்கில் தொங்கிய இரட்டையர்கள்! விசாரணை – Tamil VBC

மன நிலை சரியிலாத அம்மா திட்டினாரா? ஒரே அறையில் தூக்கில் தொங்கிய இரட்டையர்கள்! விசாரணை

வீட்டில் ஓன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் பத்மபிரியா ஹரிப்பிரியா இருவரும் இரட்டையர்கள். இருவரும், காட்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு தற்போது முடித்துள்ளனர்.

தொடர்ந்து 12ஆம் வகுப்பிற்கான பாடங்கள் ஓன்லைனில் படித்து வருவதாக கூறப்படுகிறது.நேற்று காலை, ஓன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை கவனிக்க போகிறோம் என்று கூறிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர்.வீட்டின் கீழ்தளத்தில் கவுரியும், இரட்டை சகோதரிகளின் சகோதரன் பத்மகுமாரும் இருந்தனர். காலையில் போனவர்கள், நேரமாகியும் 2 பேரும் மாடியில் இருந்து வரவில்லை என்று உணவருந்த கவுரி இருவரையும் அழைக்க சென்றுள்ளார்.

அவர்கள் இருந்த அறை உள்பக்கம் பூட்டபட்டிருந்தது. ஜன்னலும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதனால் பதட்டமடைந்த கவுரி, உடடினயாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து ஜன்னலை உடைத்து பார்த்தபோது 2 பேருமே வேற வேற பக்கம் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.
இதை பார்த்ததும் கவுரி அலறி கதறி துடித்தார். உடனடியாக காட்பாடி பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமான வழக்கும் பதிவு செய்து எதற்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் கவுரி சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. எனவே பிள்ளைகள் தான் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது என்ற அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர்.அவர்கள் சரியாக சமைப்பதில்லை என்று கவுரி அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பராம்.அதனால் அம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகிறார்கள். எனினும் முழு விசாரணை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என நம்பப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *