கோடி ரூபாய் கொடுத்தலும் என் அக்காவுக்கு ஈடாகுமா….? ஜெயஸ்ரீ தங்கை பேசிய கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..! – Tamil VBC

கோடி ரூபாய் கொடுத்தலும் என் அக்காவுக்கு ஈடாகுமா….? ஜெயஸ்ரீ தங்கை பேசிய கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!

விழுப்புரம் சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் தங்கை பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.விழுப்புரம் சிறுமதுரை காலணியை சேர்ந்த ஜெயபால், ராஜி தம்பதியர் மகள் ஜெயஸ்ரீ. இவர், கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்து எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜெயஸ்ரீ தங்கை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஜெயஸ்ரீ தங்கையின் கண்ணீர் கேள்வி.தாய் தந்தையின் கதறல் அரசே பதில் என்ன?

Posted by Syed Baridh Raja on Wednesday, May 13, 2020

அதில், எத்தன வருசத்துக்கு முன்னாடி குடுத்த கேஸ்க்கே இன்னும் எதுவும் நடக்கலா…. என் அக்கா செத்திச்சு…. நான் எங்க போவேன்… கோடி ரூபா கொடுத்தலும் என் அக்காவுக்கு ஈடாகுமா? என் சாமி அவ கூடயே இருக்கும்… என் அக்கா என் கூடயே இருக்கும்…” என்று அழுதவாறே பேசியுள்ளார்.இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *