‘குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல’ நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்! – Tamil VBC

‘குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல’ நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்!

நீச்சல் குளத்தில் குளிப்பது போல, பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கன்னட படங்களிலும் நடித்துள்ள ஸ்ரத்தா, தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.

இப்போது கொரோனா காரணமாக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நடிகைகள், இன்ஸ்டாகிராமை போட்டோக்களால் நிரப்பி வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி, தாங்கள் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ, யோகா மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

சில நடிகைகள், சமையல் செய்யும் வீடியோக்களையும் பகிர்கின்றனர். சிலர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வருகின்றனர். லாக்டவுன் அவர்களை இப்படி மாற்றி இருக்கிறது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை இப்போது பதிவிட்டுள்ளார் ஸ்ரத்தா தாஸ்.

இதற்கு நெட்டிசன்கள் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ‘குவாரைன்டைன் ரொம்ப போரடிச்சுட்டுல்ல… அதனால்தான இப்படி?’ என்று ஒருவர் கேட்க, நீச்சலடிப்பது உடலுக்கு நல்லது, நீந்துங்க, நீந்துங்க, நீந்திகிட்டே இருங்க’ என்று சிலர் கூறியுள்ளனர். சில ரசிகைகள், உங்களை போல அழகாகணும், அதுக்கு என்ன செய்யணும்? என்று கேட்டுள்ளனர்.ஒரு ரசிகர், எங்களை எப்போதும் ஏமாற்றாத நடிகை நீங்க… தாராளமான குளிங்க’ என்று கூறியுள்ளார். இன்னொருவர், இது லாங்ஷாட்ல இருக்கு. குளோசப் போட்டோ இருந்தா போடுங்களேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒரு ரசிகை, உங்களை போலவே எனக்கும் இடுப்பு வேணும் என்று தனது ஏக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *