பெருமாளை தரிசிக்க கருடனிடம் அனுமதி பெற வேண்டுமா…? – Tamil VBC

பெருமாளை தரிசிக்க கருடனிடம் அனுமதி பெற வேண்டுமா…?

பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்.கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

கருடனை பக்ஷகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம், காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *