சனி வக்ர பெயர்ச்சி 2020 : இந்த 5 ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார்! யாருக்கெல்லாம் பாதிப்பு தெரியுமா? – Tamil VBC

சனி வக்ர பெயர்ச்சி 2020 : இந்த 5 ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார்! யாருக்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?

சனிபகவான் ஆயுள் காரகன், தொழில் ஜீவன காரகன். நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் சனிதான் அதிபதி.
சனியின் பலமே ஒருவரை உற்சாகமாகவோ, மந்தமாகவோ வைத்திருக்கும். சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.மே மாதம் 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை மகரத்தில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.இந்த வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் பணக்கஷ்டம் நீங்கும் வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போயிருக்கும் மக்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரம் சற்றே ஆறுதலை தரப்போகிறது.சனி வக்ரமடைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் மகரம் ராசியில் அதிசாரமாக சென்றுள்ள குரு பகவானும் மே 14ஆம் தேதி முதல் வக்ரமடைகிறார்.சுக்கிரனும் மே 13ஆம் தேதி முதல் வக்ரமடைகிறார். மொத்தத்தில் இந்த கால கட்டத்தில் மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து பின்னர் நேர் கதிக்கு திரும்புகின்றன.சனிபகவான் வக்ரமடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்:தொழில் ஸ்தானத்தில் உள்ள சனிபகவானால் வேலை, தொழிலில் நிறைய பிரச்சினை ஏற்பட்டது. இனி உங்களுக்கு மந்த நிலை மாறும். மிகவும் உற்சாகமாக வேலையை தொடங்குவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டகரமான கால கட்டம். பண வரவு அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வருங்காலத்திற்கு தேவைப்படும். நிரந்தர வேலை கிடைக்கும் சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்றாக படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.

ரிஷபம்:ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அஷ்டமத்து சனி ஆட்டி படைத்தது. ஜனவரி முதல் ஒன்பதாம் வீட்டிற்கு போன சனியால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டீர்கள். சனி வக்ரம் பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் நீங்கள் எந்த முதலீடுகளையும் பெரிய அளவில் செய்ய வேண்டாம். இந்த கால கட்டத்தில் உங்க பெர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரலாம். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. உயர்கல்வி தேர்வுகளுக்காக கவனமாக படிங்க.

மிதுனம்:மிதுனம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும். பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் வரலாம் வருமானம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம் திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம். வேலை தொழிலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. முன் யோசனையின்றி பேசிவிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்க. தேர்வுகளில் கவனம் செலுத்துங்க.

கடகம்:கடகம் ராசிக்காரர்களுக்கு வக்ர சஞ்சாரத்தினால் பாதிப்புகள் குறையும். எதிரிகள் தொல்லை குறையும், மறைமுக போட்டி பொறாமைகள் குறையும். இந்த 140 நாட்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். திடீர் அதிர்ஷ்டங்கள், பண வரவுகள் வரலாம். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த மந்தநிலை மாறும். படிப்பில் சுமாராக இருந்த மாணவர்கள் கூட பாயும் புலியாக மாறி படித்து தேர்வுகளை எதிர்கொள்வீர்கள்.

சிம்மம்:சிம்மம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரத்தினால் உங்க நிதி நிலமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். திடீர் அதிர்ஷ்டங்களும் பண வருமானமும் வரும். இந்த கால கட்டத்தில் சேமித்து பழகுங்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். வம்பு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலகட்டம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கன்னி:சனி பகவான் வக்ர சஞ்சாரத்தினால் உங்களின் திறமை பளிச்சிடும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். இந்த 140 நாட்களும் உங்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும் என்றாலும் உங்க உடல் ஆரோக்கியத்திலும் உங்க அம்மாவின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

துலாம்:துலாம் ராசிக்காரர்கள் சனி வக்ர சஞ்சார கால கட்டத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அம்மா வழி உறவினர்களிடம் இந்த கால கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கித்தர வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள், பாதிப்புகள் தீரும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கடன் வாங்காதீங்க. அதே நேரத்தில் கால்களில் பிரச்சினை வரலாம் கவனம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. மறதி ஏற்படலாம் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை திரும்ப படிங்க.

தனுசு:தனுசு ராசிக்காரர்களே, மகரத்தில் ஆட்சி பெற்றிருந்த சனி வக்ரமடைவதால் பாதிப்பு வருமே என்று நினைக்காதீங்க உங்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க இந்த காலகட்டத்தில் புதிய பிசினஸ் செய்யலாமா என்று நினைப்பீங்க பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் செய்யாதீங்க. மாணவர்கள் உங்க படிப்பில் கவனமாக இருங்க. படித்ததை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பாருங்க.

மகரம்:மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுடைய ராசி அதிபதி ஆட்சி பெற்ற சனி வக்ரமடைவதால் உங்களுக்கு பண பிரச்சினை வரலாம். நிதி நிர்வாகத்தில் கவனமாக இருங்க. வேலை விசயத்தில் கவனமாக இருங்க. எந்த சூழ்நிலையிலும் இப்போதைக்கு புது வேலைக்கு மாற வேண்டாம். உடல் பிறந்தவர்களுடன் பேசும் போது கவனமாக இருங்க. தாய் வழி உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள வேண்டாம். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள்.

கும்பம்:கும்பம் ராசிக்காரர்களுக்கு வக்ர சனிப்பெயர்ச்சியால் விரைய செலவுகள் குறையும். தொழில் வியாபாரத்தில் போட்ட முதலீடு திரும்ப வருமா என்ற யோசனை எழலாம். கவலை வேண்டாம் உங்க பணம் பத்திரமாக இருக்கும். பங்குச்சந்தைகளில் இந்த கால கட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். சின்னச் சின்ன உடல் நலப்பிரச்சினைகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்:மீனம் ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வருமானம் வரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து விடுங்கள். கொரோனா வைரஸ் காரணமாக முடங்கிப் போயிருந்த கலைத்துறையினருக்கு நம்பிக்கை வெளிச்சம் தென்படும். புதிய வாய்ப்புகள் வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்க ஆரோக்கியரீதியாக சின்னச் சின்ன பாதிப்புகள் வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *