நான்கு வயதிலேயே பாலியல் தொந்தரவுக்கு உள்ளான மரியான் பட நாயகி! – Tamil VBC

நான்கு வயதிலேயே பாலியல் தொந்தரவுக்கு உள்ளான மரியான் பட நாயகி!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பார்வதி மேனன். தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் டேக் ஆஃப் என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய நடிகை விருதை(சிறப்புப் பிரிவு) பார்வதி பெற்றார்.

‘மீ டூ’ இயக்கத்தில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படை யாகச் சொல்லவேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வருபவர் பார்வதி மேனன். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் திலீப்பை, மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் பார்வதி.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறிய தாவது: பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்தில் வரும் என்பதை யாரும் அறிய முடிவதில்லை. எனக்கு 4 வயதாக இருந்தபோதே பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். அதை தெரிந்துகொள்ளவே எனக்கு 17 ஆண்டுகள் ஆனது. அதைப் பற்றி தைரியமாக வெளியில் பேச 10 ஆண்டுகளாகியுள்ளது. இப்போது அந்த சம்பவம் குறித்துப் பேச முடிகிறது. ஆனால் அதை அப்போது சொல்ல முடியவில்லை. அது எனக்கு அப்போது மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்தேன். எனக்கு எனது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *