இன்று இந்த ராசிக்காரங்களுக்கு யோகம் அடிக்கப் போகுது. – Tamil VBC

இன்று இந்த ராசிக்காரங்களுக்கு யோகம் அடிக்கப் போகுது.

வேலையில்லை எதுவுமில்லை. பணவரவும் இல்லை வாழ்க்கை இப்படியே போயிருமா? எதாவது விடியல் வருமா? எப்பவோ கொடுத்து வச்ச பணம் திரும்ப வருமா? என்னெற்றால் பலரும் யோசிக்கலாம். ஆரோக்கியம் எப்படி இருக்கும் திடீர் மருத்துவ செலவு வருமா என்ற பல கேள்விகளுக்கு இன்றைய ராசிபலன் பதில் தருகிறது. வெள்ளிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் சுக்கிரன் அருளால் யாருக்கு பணம் வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அமோகமா இருக்கும். அதோட குடும்பத்துலயும் செலவுங்க கண்ட்ரோல்ல இருக்கும். பிள்ளைங்களும் படிப்புலயும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு யோகமான நாளா அமையும். பண வரவும் சந்தோஷத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் அதிர்ஷ்ட எண் : 10 சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

ரிஷபம் : இன்னிக்கு உங்க ஆரோக்கியம் நல்லா இருந்தாலும் பிள்ளைங்களோட மருத்துவ செலவுக்காக சின்னதா செலவழிக்குற மாதிரி இருக்கும். பிசினஸ்ல இருந்துவந்த பிரச்சனைங்களும் காணாம போயி லாபமும் கூடிடும். மனைவியோட சொந்தக்காரங்க வழியில உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால கை காச கறைஞ்சிடும். அதனால நிதானமா செலவழிக்க பாருங்க. அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள் அதிர்ஷ்ட எண் : 7 சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

மிதுனம் : இன்னிக்கு உங்களுக்கு மதியம் வரைக்கும் சந்திராஷ்டமம் இருக்குறதுனால புது முயற்சிங்களையும் சுபகாரிய பேச்சுவார்த்தைங்களையும் மத்தியானத்துக்கு மேல பேசி முடிவெடுக்குறது நல்லது. கடந்த ரெண்டு நாளா இருந்துவந்த பிரச்சனைங்களும் இன்னிக்கு படிப்படியா குறைஞ்சுடும். மத்தியானத்துக்கு மேல வீட்ட விட்டு வெளிய போறதை அவாய்ட் பண்ணிடுங்க. குடும்பத்துல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. தேவையில்லாம பேசாதீங்க. அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 12 சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம் இன்னிக்கு உங்க ராசிக்கு மத்தியானத்துக்கு மேல சந்திராஷ்டமம் வர்றதுனால எதுலயும் நிம்மதியே இல்லாத நிலை தான் இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி தொகையும் வர்றதுல தடங்க, இடைஞ்சல் வரலாம். அதனால எந்த வேலையையும் கொஞ்சம் யோசிச்சி நிதானமா செய்ய பாருங்க. கொரோனா பீதி இருக்குறதுனால, வீட்ட விட்டு வெளிய போக நினைக்காதீங்க. இன்னிக்கு குடும்பத்துலயும் அநாவசிய டென்ஷன் வந்துடும். அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை அதிர்ஷ்ட எண் : 15 சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

சிம்மம் இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா இருந்து வந்த அலைச்சல் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு. குடும்பத்துல சுப செலவுங்க வந்து வரிசை கட்டி நிக்கும். சிக்கனமா செலவழிக்க பாருங்க. முக்கியமான வி.ஐ.பிக்களால உங்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். மொத்தத்துல இன்னிக்க நீங்க நெனச்ச காரியம் நெனச்ச மாதிரியே நடந்துடும். அதிர்ஷ்ட நிறம் : மெரூன் அதிர்ஷ்ட எண் : 28 சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

கன்னி இன்னிக்கு உங்களுக்கு வீண் செலவுங்க வந்து கையை கடிக்கலாம். பணப்பிரச்சனையில இருந்து தப்பிக்கணும்னா சிக்கனமா செலவழிக்க பாருங்க. அதோட குடும்பத்துல இருக்குறவங்களையும் கொஞ்சம் அனுசரிச்சி போகப் பாருங்க. பேங்க் லோனுக்கு ட்ரை பண்ணுனீங்கன்னா இன்னிக்கு கிடைக்கலாம். எதிர்பாத்த இடத்துல இருந்தும் உங்களுக்கு பண உதவி கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ அதிர்ஷ்ட எண் : 21 சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

துலாம் இன்னிக்கு கூட இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா பிரச்சனை வராம அவாய்ட் பண்ணலாம். கூடவே எந்த வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிச்சி செய்யுறது நல்லது. பிள்ளைங்களால தண்டச்செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. குடும்பத்துலயும் இன்னிக்கு ஒத்துமை குறைய வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க. அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள் அதிர்ஷ்ட எண் : 16 சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம் இன்னிக்கு வீட்டுல எல்லோருமே ஒத்துமையா சந்தோஷமா இருப்பாங்க. பிள்ளைங்களும் உங்க மனசறிஞ்சி நடந்துக்குவாங்க. கல்யாண பேச்சுவார்த்தையில இருந்துவந்த தடங்கல், இடைஞ்சல் காணாம போயி எல்லாமே நல்லபடியா முடியும். இன்னிக்கு குல தெய்வத்தை கும்பிட்டு வேலையை ஆரம்பிச்ச எல்லமே நல்லபடியா முடியும். அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் அதிர்ஷ்ட எண் : 4 சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு இன்னிக்கு கையில பணம் வர்றதுக்கு முன்னாடியே செலவுங்க லைன்ல நிக்கும். அதனால நீங்க ஆடம்பர சாமான்களை வாங்குறதை அவாய்ட் பண்ணிட்டு, சிக்கனமா செலவழிச்சா பணப் பிரச்சனையில இருந்து தப்பிக்கலாம். குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட விதண்டாவாதம் பேசாம கம்முன்னு இருக்க பாருங்க. இன்னிக்கு நீங்க செய்யுற முயற்சியில வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண் : 24 சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மகரம் இன்னிக்கு பிள்ளைங்களால சந்தோஷம் தரக்கூடிய செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் திருப்திகரமா இருக்குறதுனால, பண வரத்தும அமோகமா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட இருந்துவந்த மனஸ்தாபம் கறைஞ்சி போயிடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு அதிர்ஷ்ட எண் : 8 சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம் இன்னிக்கு புதுசா எந்த திட்டத்துலயும் இண்வெஸ்ட் பண்ண வேணாம். பேச்சு வார்த்தையில ரொம்பவே நிதானம் அவசியம். சொந்தக்காரங்கனால செலவும் எகிறிடும். அதனால பணத்தை சிக்கனமா செலவழிக்கப் பாருங்க. சுபகாரிய முயற்சியில கொஞ்சம் நிதானமா யோசிச்சி முடிவெடுங்க. இன்னிக்கு பணவரத்து அமோகமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவுங்களும் வரிசை கட்டி நிக்கும். அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ அதிர்ஷ்ட எண் : 34 சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை

மீனம் இன்னிக்கு மனசுக்கு சந்தோஷம் கொடுக்கக்கூடாய தரமான சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கு. செலவுங்களும் அதுக்கேத்த மாதிரி வரிசையா வந்துட்டே இருக்கும். பிசினஸை இம்ப்ரூவ் பண்றதுக்கு நீங்க எடுக்கக்கூடிய முயற்சிங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். சுபச் செய்திங்க உங்க காதுக்கு வந்து மனசுக்கு சந்தோஷத்தை கொடுத்துடும். உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 34 சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *